Translate

Monday, 30 July 2012

பிரபாகரனுடன் யுத்தம் நடத்திய காலத்தை விட தற்போது ஆபத்தான தருணமாம் – குணதாஸ கண்டுபிடிப்பு!

Posted Image
இனத் துரோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாவிட்டால் நாடும் இனமும் அழிவுப்பாதையில் செல்வதனை யாராலும் தடுக்க முடியாது என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகலின் தலைவரான பிரபாகரனுடன் போர் நடத்திய காலத்தை விடவும் தற்போது ஆபத்தான தருணம் உதயமாகியுள்ளது என அவர் எச்சரித்துள்ளார்.
மேற்குலக நாடுகளான இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை பிளவடைவதனையே விரும்புகின்றன.
2018ம் ஆண்டில் சீனா உலக வல்லரசாக மாற்றமடைந்துவிடும் இதனால் பீதியடைந்துள்ள அமெரிக்கா இலங்கையில் முகாம் ஒன்றை அமைக்க முயற்சிக்கின்றது.
இதன் காரணமாகவே அமெரிக்கா இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்து வருகின்றது என குணதாச அமரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரபாகரன் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து, 13ம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்காகவே நாம் ஜனாதிபதிக்கு வரையறையற்ற அதிகாரங்களை வழங்கினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.saritham.com/?p=65084 

No comments:

Post a Comment