Translate

Tuesday, 31 July 2012

தமிழீழம் என்ற இலக்கில் தொடர்ந்து பயணிக்க உறுதிமொழி உலகத் தமிழ் அமைப்புக்கள்.

தமிழீழம் என்ற இலக்கில் தொடர்ந்து பயணிக்க உறுதிமொழி உலகத் தமிழ் அமைப்புக்கள்.
30 July, 2012 VaakaiTV www.livestream.com/vaakai
 
ஈழத் தமிழர்களின் ஒரே அரசியல் அபிலாசையான சுதந்திரமும், இறைமையுள்ள தமிழீழம் என்ற இலக்கை வெல்வதற்கான பயணத்தில் தொடர்ந்தும் உறுதியுடனும், அர்ப்பணிப்புடன் பயணிக்கவும், அதன்பாற்பட்ட அரசியல், பொருளாதார மற்றும் சமூக செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்படவும் உலகளாவிய தமிழ் அமைப்புக்கள் உறுதிபூண்டுள்ளன.


நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் ஒன்று கூடிய பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியற் அமைப்புக்ககளின் பிரநிதிதிகள் கடந்த வெள்ளிக்கிழமை( யூலை 27) தொடங்கி ஞாயிற்றுகிழமை (யூலை 29) வரை நடைபெற்ற மாநாட்டின் நிறைவின் போது இந்த முடிவை ஏகமனதாக மீள் வலியுறுத்தின.

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக சிறிலாங்கா அரசு தமிழ் மக்களை அழித்தும், அவர்களின் பூர்வீக நிலங்களை பறித்தும், அவர்களின் பண்பாடு மற்றும் பொருண்மிய வளங்களை சிதைத்தும் வருகின்ற செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில், தமிழர்களின் அரசியற் அபிலாசையை சர்வதேச சமூகத்திடமும், ஏனைய சக்திகளிடமும் அழுத்தி சொல்ல வேண்டிய முக்கிய தருமணமாக இது அமைகின்றது எனவும், தமிழர்களின் அரசியற் பேரம் பேசும் சக்தியை தாயகத்திலும் , புலத்திலும் வலுபடுத்தவும், வேகமெடுத்துள்ள சிங்கள அரசின் இன விரோத செயற்பாடுகளுக்கு கடிவாளம் போடவும், இறமையுள்ள தமிழீழத்தை அடைவதற்கான அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் அந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

மேற்குறித்த செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைப்புக்கள் அனைத்தும் புரிந்துணர்வுடன் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு உறுதிபூண்டுள்ளன.

நிறைவு.

கனேடிய ஈழத்தமிழர் பேரவை
பிரித்தானிய தமிழர் பேரவை
நோர்வே ஈழத்தமிழர் பேரவை
ஜேர்மன் ஈழத்தமிழர் பேரவை
பிரான்சு ஈழத்தமிழர் பேரவை
டென்மார்க் தமிழர் பேரவை
நெதர்லாந்து தமிழர் பேரவை
இத்தாலி ஈழத்தமிழர் பேரவை
நியுசிலாந்து இளையோர் அமைப்பு
தமிழ் நிவாரண நிதி, மலேசியா
சுவிஸ்லாந்து ஈழத்தமிழர் பேரவை

No comments:

Post a Comment