Translate

Tuesday, 10 July 2012

கிளிநொச்சியின் இந்து ஆலயங்கள் விபரம் திரட்டும் படையினர்.

கிளிநொச்சியின் இந்து ஆலயங்கள் விபரம் திரட்டும் படையினர் மக்கள் அச்சத்தில் கிளிநொச்சியில் அமைந்துள்ள இந்து ஆலயங்களின் விபரங்களை படையினர் சேகரித்து வருவது தமிழ் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காவை முதல் ஊர்ந்துருளியில் ஆலயங்கள் தோறும் சென்ற படையினர் அவ் ஆலயங்களின் வரலாறுகள் விபரங்கள் மற்றும் விக்கிரகங்களின் தன்மைகள் என்பனவற்றை கேட்டு அவற்றை குறிப்பெடுத்து கொண்டதால் மக்கள் இவ்வாறு அச்சப்பட்டுக் கொண்டுள்ளதாக கிளிநொச்சி செய்திகள் தெரிவிக்கின்றன.


இன்று காலை முதல் இரு சீடுடை அணிந்த சிப்பாய்கள் யாழ் வவுனியா நெடுஞ்சாலைக்கு மேற்காக உள்ள ஆலயங்களின் விபரங்களை திரட்டியதை காணக்கூடியதாக இருந்ததாக தெரிவித்துள்ள எமது செய்தியாளர், ஆலய வரலாறு அவை கட்டுமானம் செய்யப்பட்ட முறை மற்றும் ஆண்டு. பக்தர்களின் வழைமையான எண்ணிக்கை என்பனவற்றை கேட்டறிந்து கொண்டதாகவும் ஆலய வளாகத்தை பல கோணங்களில் படம் பிடித்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்துடன் அப் பகுதி மக்கள் படையினரின் இவ் செயற்பாடு சந்தேகங்களை கிளப்பியுள்ளதாகவும் ஏற்கனவே உருத்திரபுரீச்சரத்தில் புத்தர் சிலை ஒன்று இருந்நதாக தெரிவித்து அங்கு படையினர் தேடுதல் நடாத்த முற்பட்டு மக்கள் முரண்பட்டுக் கொண்டதையும் இன்றும் பல இடங்களில் தொடந்து புத்தர் சிலைகள் படையினரால் நிறுவப்பட்டு வருவதும் பல இடங்களில் மக்களிடத்தில் கொதிநிலையை உருவாக்கியுள்ள நிலையில் படையிரால் மீண்டும் இவ்வாறு ஆலய விபரங்கள் சேகரிக்கப்படுவது நிச்சம் உள்நோக்கம் கொண்டதாக இருக்கும் என்பதில்

சந்தேகிக்க இடம் இல்லை எனவுமு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நில அபகரிப்பு படை மயமாக்கல், பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரங்கள் மறுக்கப்பட்ட படை மயமாக்கப்பட்ட சூழலில் படையினரின் இவ் செயற்பாடுகள் சிறீலங்காவின் படை அடக்கு முறைக்கும் பொது நிர்வாகங்களில் படையினர் தலையீட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

No comments:

Post a Comment