Translate

Saturday, 14 July 2012

பிரிட்டனில் ஒருநாள் மட்டும் மழை பெய்யாது


flood_drop_001புயலும், தொடர் மழையும் பெய்து வரும் நிலையில் எதிர்வரும் திங்கள்கிழமை மட்டும் பிரிட்டனில் உலர்ந்த நிலையே காணப்படும் என்று வானிலை அறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பிரிட்டனில் ஏப்ரல் மாதம் முதல் யூன் மாதம் வரை, ஆர்க்டிக் கடல் பகுதியிலிருந்து பனி உருகி வருவதால் பெருமழை பொழிந்தது. தற்போது யூலையிலும் இந்நிலை தொடர்கிறது.
துருவப் பகுதியின் காற்றுக்கும், வெப்பப்பகுதியின் காற்றுக்கும் இடையில் திரை விழுந்தது போலிருப்பதால், தற்போது வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சர் டேவிட் சுட்டன்பரோ தற்போது நிலவும் ஈரப்பதத்தால் பட்டுப்பூச்சிகள் அதிகமாக பாதிக்கப்படும் என்று நேற்று எச்சரித்தார்.
இந்நிலையில், எதிர்வரும் திங்கள்கிழமை மட்டும் சிறு தூறல் கூட இல்லாமல் வானம் தெளிவாக மேகமின்றிக் காணப்படும்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளினி ஹெலன் சிவர்ஸ் கூறுகையில், எதிர்வரும் திங்கள்கிழமையன்று பிரிட்டன் மற்றும் வேல்ஸ் ஆகிய இரண்டு நாடுகளிலும் உலர்ந்த நிலையே காணப்படும் என்றார்.
ஆனால், நாளையும், நாளை மறுநாளும் தென்மேற்குப் பகுதி முதல் பிரிட்டனின் தென்பகுதி வரை மழை தொடரும். மத்தியப் பகுதியிலும், கிழக்கு பிரிட்டனிலும் இடிமழை பொழியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment