Translate

Sunday, 15 July 2012

இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் பாரம்பரியமாக உள்ளவர்கள் இரண்டு பிரிவு மக்கள்:

இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் பாரம்பரியமாக உள்ளவர்கள் இரண்டு பிரிவு மக்கள்:

1.தலித் மக்கள் 2. முஸ்லீம்கள்.

குறிப்பாக பிராந்திய மொழி பேசும் முஸ்லிம்கள், இந்து மத எதிர்ப்புணர்வுக்காகவே மதம் மாறியவர்கள். இவர்கள் முஸ்லிம்களாக மதம் மாறிய பின் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு மாறினார்கள் என்று சொல்ல முடியாது. மாட்டிறைச்சி உண்ணும் பழக்க முடையவர்களே முஸ்லிம்களாக மாறியிருக்கிறார்கள். அப்படிய
ானால் யார் அவர்கள்?


தாழ்த்தப்பட்ட மக்கள் தானே!

வெள்ளாள கிறிஸ்துவர், கிறிஸ்துவ உடையார், கிறிஸ்துவ தேவர், நாடார் கிறிஸ்துவர், வன்னிய கிறிஸ்துவர் இவர்களுக்குக் கீழே தலித் கிறிஸ்துவர். இப்படியாக கிறிஸ்துவ மதம்.
ஜாதியையே தன் உருவமாகக் கொண்டது இந்து மதம்.

இந்த இந்தியச் சூழலில், நேரடியான ஜாதி அடையாளங்கள் அற்று இருக்கிறது இஸ்லாம்.
எப்படி அவர்களுக்கு மட்டும் இது முடிந்தது?

சுயம்பு சிந்தனையாளர்கள் இது குறித்துச் சிந்திப்பார்களா? சிந்தித்த பிறகு அதை இந்த உலகிற்கு அறிவிப்பார்களா?

பார்ப்போம்.

எழுச்சி தலித் முரசு ஆகஸ்ட் 2002

http://mathimaran.wordpress.com/2008/06/10/article84/

No comments:

Post a Comment