சமுதாய மீறல்கள், மத பாகுபாட்டுச் சம்பவங்கள் கடந்த 2011ம் ஆண்டு இலங்கையில் பதிவாகியுள்ளதென ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது பௌத்தர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இவ்வாறான சில சமூக மீறல் செயற்பாடுகளால் இலங்கையில் ஆங்காங்கே பரபரப்பு ஏற்பட்டதாக ஐக்கிய அமெரிக்கா வெளியிட்டுள்ள 2011வருடாந்திர சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் சமீபத்திய ஆண்டில் நடைபெற்ற தாக்குதல்களைவிட கடந்த வருடம் குறைவான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசியல் யாப்பு, சட்டம், மத சுதந்திரத்தை பாதுகாக்க ஏற்பாடுகள் உள்ளன. அரசாங்கம் பொதுவாக மத சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கிறது. ஆனால் அதற்கு எடுத்துக் காட்டான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. மத சுதந்திரத்தை பாதுகாக்கும் அரசின் செயற்பாடுகளில் முன்னேற்றம் அல்லது சரிவு காணப்படவில்லை என அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத சுதந்திரம் பிரச்சினைகள், தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் பற்றி ஐக்கிய அமெரிக்க தூதரக அதிகாரிகள் அரசாங்கத்திடம் கவலை தெரிவித்ததோடு தேவாலயங்கள் மற்றும் மத நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு அரசாங்க தலைவர்களிடம் வலியுறுத்தியது.
மத சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் பல சம்பவங்கள் இடம்பெற்றபோது அதற்கு கட்டணம் வெளியிட்ட அரசு, நடைமுறையில் செயற்பாட்டு ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கும் திட்டத்தில் பிரச்சினை உள்ளதென அமெரிக்காவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
வட பகுதி தமிழ் பிரதேசங்களில் அரச படையினர் புத்தர் சிலைகளை அமைத்து வருவதாகவும் புலிகள் இருந்த பகுதிகளை அரசாங்கம் சிங்களமயமாக்குவதை இதன் மூலம் காண முடிவதாகவும் தமிழ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் வெளியிட்டுள்ள மத சுதந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
.
No comments:
Post a Comment