பிரபாகரனின் மரணத்திற்கு கருணாநிதியே காரணம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்திற்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியே காரணம் என நடிகரும்,தமிழக அரசியல்வாதியுமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற போது தமிழகத்தில் கருணாநிதி முதலமைச்சராக ஆட்சி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் துயரங்களை எதிர்நோக்கிய தருணங்களில் முதலமைச்சராக கடமையாற்றிய கருணாநிதியும்,கூட்டணி மத்திய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் டொசோ மாநாட்டின் மூலம் தமிழர் உரிமைகளை பாதுகாக்கப் போவதாக கருணாநிதி அறிவித்திருப்பது நகைப்பிற்குரியது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி தமது நிலைப்பாடுகளில் ஸ்திரமாக இருந்ததில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
டொசோ மாநாட்டில் தமிழீழம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும் என முன்னர் அறிவித்த கருணாநிதி பின்னர் அந்த எண்ணத்தை கைவிட்டுள்ளதாகவும் விஜயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்
.
.
No comments:
Post a Comment