கடந்த பெப்ரவரி மாதம் ஒக்ஸ்போர்ட்டில் டொமெய்ன் வீதியில் எரிந்த வாடகை வீடொன்றிலிருந்து 28 வயதான சமீர சந்திரசேன என்பவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
இலங்கையைச் சேர்ந்தவரான சமீர சந்திரசேன, தீ பரவ முன்னர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துவான் பிரவோஷ் சவால் (வயது 23), வீராஜ் அழகக்கோன்(வயது 33) ஆகிய இருவரும் கொலை மற்றும் தீ வைப்புக்களில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரும் வெள்ளிக் கிழமை கிறிஸ்சேர்ச் மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment