Translate

Tuesday, 10 July 2012

Walsingham மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் (காணொளி)

 
Walsingham மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் (காணொளி) 

கடந்த ஆண்டு பத்தொன்பதாயிரம் (£19,000) பிரித்தானியப் பவுண்ஸ்கள் காணிக்கையாகப் பெறப்பட்டு, தாயக மக்களின் உதவிக்காகப் பயன்படுத்தப்பட்டது என இங்கு அறிவிக்கப்பட்டது.



http://www.eelamdaily.com/news/6028/57/Walsingham.aspx


Walsingham மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் (காணொளி)

வோல்சிங்கம் மாதா ஆலயத்தின் (Walsingham Church) வருடாந்த திருப்பலி நேற்று (08-07-2011) இடம்பெற்றது.

பிரித்தானியாவில் லண்டனுக்கு வெளியே 100 மைல் தொலைவில் மேற்கு கடற்கரை நகரமாகிய Norfolk இல் அமைந்துள்ள வோல்சிங்கம் வரலாற்றுப்புகழ்பெற்ற தேவாலயத்தில் தமிழ்த் திருப்பலி இருபத்தி ஜந்தாம் ஆண்டாக (வெள்ளிவிழா) வெகு சிறப்பாக நடைபெற்றது.

லண்டனிலும், தாயகத்திலிருந்தும் வருகைதந்த கத்தோலிக்கக் குருக்கள் இணைந்து இத்திருப்பலியினை நடத்தியிருந்தனர். நேற்றைய திருப்பலியினை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம்இ போல் றொபின்சன்இ ராஜசிங்கம் றொபின்சன் யோசெப் ஆகிய குருக்கள் ஒப்புக்கொடுத்தனர்.

தாயக மக்களுக்காக தம்உயிர்களை ஈகம் செய்தவர்களும், பொதுமக்களுக்கும் இங்கு நினைவுகூறப்பட்டதுடன், தாயகத்தில் அவலப்படும் மக்களுக்கு உதவி கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பத்தொன்பதாயிரம் (£19,000) பிரித்தானியப் பவுண்ஸ்கள் காணிக்கையாகப் பெறப்பட்டு, தாயக மக்களின் உதவிக்காகப் பயன்படுத்தப்பட்டது என இங்கு அறிவிக்கப்பட்டது.

லண்டனிலும், பிரித்தானியாவின் ஏனைய பகுதிகளில் இருந்தும் கிட்டத்தட்ட 15,000 முதல் 20,000 வரையிலான மக்கள் இந்த திருப்பலியில் கலந்து கொண்டனர்.

1130ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு இங்கிலாந்தின் ஹென்றி 3 (1226), ஹென்றி 8 (1511) மன்னர்கள் உட்பட உலகின் பல நாடுகளிலும் இருந்து யாத்திரிகர் செல்வது வழக்கமாகும். தற்பொழுது வருடாந்தம் 250,000 பேர் இந்த இந்த திருத்தலத்தை வருடாந்தம தருசித்து வருவதாக, ஆலயக் குறிப்பு கூறுவதாக ஈழம் டெய்லியின் பிரித்தானியச் செய்தியாளர் தெரிவித்தார்.

மிகச் சிறிய ஆலயமாக இருக்கின்ற போதிலும், மாதா காட்சியளித்ததாகக் கூறப்படும் இவ்வாலயம் பிரித்தானியாவின் நசரேத்து என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
காணொளி:
படங்கள்:

No comments:

Post a Comment