நாளை வருமென்று நாளைக் கடத்தாதே
வேளை வருமென்று வெருண்டு திரியாதே
நாளை உனதாக வேண்டும்-அதில்
வீரத்தமிழனின் புலிக்கொடி பறக்க வேண்டும்
கோழைத்தனம் துறந்து
வீர உணர்வோடு எழுந்துவா நீ
உனக்கென்று ஒரு நாடுகாண நாளையல்ல
இன்றே அதன் ஆரம்பம்காணப் புறப்படு
போலி சுகங்களில் பொய்வாழ்வு வாழாதே
மதங்களென்று மயங்கித் திரியாதே
பிறந்ததிற்காக நல்லதைச் செய் இன்றே
நாளை அது உன்வாழ்வைச் சிறப்பிக்கும்
உன் கனவு தமிழீழம் நிறைவேற
உன் மக்கள் உன் புகழ்பாட
உணர்வுகொண்டு எழுந்துவா
குழந்தைத் தனம் துறந்து
உன் கொள்கை வெறிகொண்டு
உலகம் புலி என்று கூற-நீ
நம்பி எழுந்துவா உன் கனவு நிறைவேறும்
குட்டக் குட்டக் குனிந்தது போதும்-இனி
தமிழன் என்ற உணர்வோடு எழுந்துவா
எமக்கென்று புதுஈழம் காண்-அதில்
உன் தலைவனோடு நீ உண்மை அரசியலமை
பொய்தனை பொசுக்கி மெய்தனை மெருகூட்டு
கல்லாமை நோயை இல்லாமை ஆக்கி
தமிழீழம் காண புத்துணர்வுடன்
இளைஞரே எழுந்திடுங்கள்
No comments:
Post a Comment