உடம்பில் அதிக அளவில் பித்தம் கூடினால் தலை நரைக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இன்றைக்கு மாறி வரும் சூழ்நிலையால் 15 வயது முதலே தலை நரைக்கத் தொடங்கி விடுகிறது.
சமச்சீரற்ற உணவு முறை, எண்ணெய் வைக்காமல் தலை சீவுவது, ரசாயனப் பொருட்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உபயோகிப்பது போன்றவைகளினாலும் தலைமுடி வெள்ளையாகிறது.
இன்றைக்கு 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள்.
அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களும்தான். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தும் அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைப்பதும் வாடிக்கையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு யாரும் இதனை பின்பற்றுவதில்லை.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். அதை சுத்தமான தேனுடன் சேர்த்து ஊறவைத்து தினசரி காலையில் அதை சாப்பிட்டு வர பித்தம் தணியும் இளநரை தானாகவே மாறும்.
தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்யவும். இதனால் இளநரை தானாகவே மாறும். கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.
பசு மோர் இளநரையை போக்கும் அருமருந்து. வாரம் இருமுறை மோர் தலைக்கு தேய்த்து குளிக்கலாம் உஷ்ணம் நீங்கும்.
தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் கறிவேப்பிலை போட்டு வேகவைக்கவும். இந்த எண்ணெயை தினசரி தலைக்கு தேய்த்து வரை கூந்தல் இயற்கை நிறத்திற்கு மாறும். முடி உதிர்வது கட்டுப்படும்.
உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது பித்தத்தை குறைக்கும்.
2 ஸ்பூன் ஹென்னா பவுடர், 1 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் வெந்தையப் பொடி, 3 ஸ்பூன் காபி, 2 ஸ்பூன் துளசி இலை சாறு, 3 ஸ்பூன் புதினா இலைச் சாறு கலந்து பேஸ்ட் போல கலக்கவும். அதை தலையில் அப்ளை செய்து மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் மைல்டு ஷாம்பு போட்டு அலசவும். இதனால் இளநரை படிப்படியாக நிறம் மாறும். தலையும் குளிர்ச்சியடையும்.
ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு கப் ப்ளாக் டீ கலந்து தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யவும். ஒரு மணிநேரம் ஊறவைத்து பின்னர் தலைக்கு குளிக்கவும். இதனால் இளநரை மாறி தலைமுடி படிப்படியாக கருமையாகும்.
இளநரையை போக்குவதில் வெங்காயம் சிறந்த மருந்தாகும். இது உதிர்ந்த இடங்களில் கூந்தலை நன்கு வளரச்செய்யும்.
ஒரு கிராம் கருப்பு மிளகு அரைக் கப் தயிர், சிறிதளவு லெமன் சாறு கலந்து தலைக்கு அப்ளை செய்யவும். இது இளநரையை மறையச்செய்யும்.
நெல்லிக்காய் பேஸ்ட், நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு பூசி வர இளநரை மறைவதோடு கூந்தல் திக்காக வளரும். மருதாணி இலையை நன்கு காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு பூசிவர கூந்தல் கருமையாகும்.
எலுமிச்சையானது கூந்தலை இயற்கை நிறத்திற்கு மாற்றும் சக்தி படைத்தது. எனவே எலுமிச்சை சாற்றை கூந்தலில் ஊறவைத்து பின்னர் நன்கு அலசினால் கூந்தல் படிப்படியாக கருமையாகும்.
நெல்லிக்காய் சாறு, பாதம் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் நன்றாக கலந்து தலைக்கு பூசி ஊறவைத்து குளிக்க கூந்தல் கருமையாவதோடு பளபளப்பாகவும், அழகாகவும் மாறும்.
|
No comments:
Post a Comment