Translate

Sunday, 8 July 2012

Mahisha returns home after her victory with Airtel Super Singer



கனடாவின் சிறந்த பாடகி மகிஷா '- தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றிய சிறுமி மகிஷாவிற்கு விஜய் ரி.வி புகழாரம்
magisha
Mahisha's Best of performance


Mahisha's Best of performance கனடாவிலிருந்து தமிழ் நாட்டிற்குச் சென்று விஜய் ரி.வியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்ச் சிறுமி மகிஷாவிற்கு கனடாவின் சிறந்த பாடகி என விஜய் ரி.வி நிகழ்ச்சி நடுவர்கள் குழு புகழாரம் சூட்டியுள்ளது.
ந்த வாரம் நடைபெற்ற போட்டியின் போது மகிஷாவின் இசைப் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. இருப்பினும் கனடியத் தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றிய சிறுமி மகிஷா என்பதில் எந்த ஐயமுமில்லை.

சிறுமி மகிஷா கடந்த ஏழெட்டு மாதங்களாக போட்டியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்னை சென்று தங்கினார். உண்மையில் சொல்லப் போனால் முதலில் மகிஷா இந்த அளவிற்கு முன்னேற்றம் பெறுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பல ஆயிரக்கணக்கானோரின் குரல் தேடலுக்கு நடுவே சிறந்த 30 பேரில் ஒருவராக மகிஷா தெரிவு செய்யப்பட்டது மிகப்பெரிய சாதனை என்று தான் கூற வேண்டும்.

பிரபல பாடகர்களை உள்ளடக்கிய நிகழ்ச்சியின் நடுவர் குழுவினரே மெய்சிலிர்க்கும் வகையில் ஒவ்வொரு போட்டியின் போதும் பாடுவதில் தன் திறமையை காட்டி வந்துள்ளார் மகிஷா. போட்டியிலிருந்து நீக்கப்பட்டாலும் கூட உலகத் தமிழர்கள் அனைவரின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்து விட்ட சோதனைகளை சாதனையாக்கிய சிறுமி மகிஷாவை இகுருவி மனமாரப் பாராட்டுகிறது.

வாழ்த்துக்கள் மகிஷா!!!
 —

No comments:

Post a Comment