Translate

Thursday, 9 August 2012

சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் 18வது நாள்! 12ம் திகதி வரை தொடரும் என அறிவிப்பு

சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் 18வது நாள்! 12ம் திகதி வரை தொடரும் என அறிவிப்பு
 

நீர் மட்டுமே அருந்தியவாறு பதினெட்டு நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் திரு. சிவந்தன் கோபி அவர்களது உடல் மிகவும் பலவீனமான நிலையை அடைந்துள்ள போதிலும், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தனது போராட்டத்தை தொடர்வதில் அவர் உறுதியாகவுள்ளார்.


இன்றைய தினம் பெருமளவிலான மக்கள் ஸ்ரற்போர்ட் நெடுஞ்சாலையில் சிவந்தனின் கூடாரம் அமைந்துள்ள பகுதிக்கு வந்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினார்.

கிழக்கு லண்டன் பகுதியிலுள்ள சில சமூக அமைப்புகளின் பிரதிகள் திரு. சிவந்தனைச் சந்தித்து தமது ஆதரவினை தெரிவித்த்துடன், அவரது போராட்டம் தொடர்பான விபரங்களை தத்தம் பிரதேசங்களில் உள்ள மக்களுக்குத் தெரியப்படுத்துவதாகவும் உறுதியளித்தனர்.

சுயாதீன செய்தியாளர்கள் சிலரும் திரு. சிவந்தனுடன் உரையாடியதுடன் அவரது போராட்ட நியாயங்களை கேட்டறிந்தனர்.

ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாளில் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு ஒன்று கூடலினைப் போல் நிறைவு நாளான வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 12ம்திகதி) மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை முன்னர் நடைபெற்றவிடத்தில் Aspen Way (Billingsgate மீன் சந்தைக்கு முன்பாக) கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்றினை நடாத்துவதற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு காவல்துறையினரின் அனுமதியைப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment