Translate

Thursday, 9 August 2012

அபிவிருத்தி செய்வதனால் மட்டும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது!- பிரான்ஸ் தூதுவர்


அபிவிருத்தி செய்வதனால் மட்டும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது!- பிரான்ஸ் தூதுவர்
 
பொருளாதார அபிவிருத்தியின் மூலம் மட்டும் நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டின் ரொபிசொன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் வெளிநாட்டு நண்பர்களுக்கு உதவிகளை வழங்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசாங்கம், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், புத்திஜீவிகள்ஆகியோர் கூட்டாக இணைந்து அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரான்ஸில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் வெளிவிவகாரக் கொள்கைளில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும், இலங்கையுடனான உறவுகளில் மாற்றம் இருக்காது எனவும் அவர் சுட்டி;காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் இன்னும் பல விடயங்களில் வடக்கு கிழக்கு மக்களுக்கு சேவையாற்றப்பட வேண்டியுள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் சிலர் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லை எனவும், பெரும்பாலான இடம்பெயர் மக்களுக்கு உரிய இருப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த வலய மக்களில் பலர் இன்னமும் பிரச்சினைகளை எதிர்நோக்கிவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பெண்களும், ஊனமுற்றவர்களும் பாரியளவு நெருக்கடிகளைஎதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அபிவிருத்தி மிகவும்அவசியமானது, எனினும், அபிவிருத்தியினால் மட்டும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தமுடியும் என்பதில் தமக்கு உடன்பாடில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் சகல பிரஜைகளும் சமவுரிமையுடன் வாழ்வதாக உணரக் கூடிய ஓர்சூழ்நிலை ஏற்பட சில காலம் தேவைப்படும் என கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை மிகவும் காத்திரமானஅறிக்கையாகவே தாம் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரை அறிக்கை தமிழ் சிங்கள மொழிகளில்பிரசூரமாக உள்ளதாக வெளியான தகவல் வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள்காத்திரமான முறையில் அமுல்படுத்துவதன் மூலம் நிரந்தர சமாதானத்தை நோக்கி பயணிக்க முடியும்என்பதே பிரான்ஸின் நிலைப்hபடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ளாது மெய்யான ஜனநாயகத்தைஏற்படுத்துவது சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் விசாரணைசெய்தல் ஆகியன தொடர்பில் சரியான பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென அவர்தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment