யாழ்ப்பாணத்தில் 2006ம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போன 462 போர் தொடர்பாக இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
யுத்தச்ம் இடம்பெற்ற காலப்பகுதியான 2006ல் காணாமல் போனவர்கள் தொடர்பான 590முறைப்பாடுகள் யாழ்.மனித உரிமை ஆணைக் குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போணவரின் நிலை குறித்து ஆராயும் முயற்சியில் மனித உரிமை ஆணைக்குழு ஈடுபட்டிருந்தது.
காணாமல் போனவர்களின் நிலை குறித்து அறிய தருமாறு அவர்கள் உறவினர்களிடம் கடித மூலம் கோரிக்கை இடப்பட்டிருந்தது.இவ்வாறு திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் காணமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டோரில் 128 பேர் மீண்டு வந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2006ம் ஆண்டு காணமல் போனவர்கள் தொடர்பாக மேலதிக விசாரனைகளை மேற்கொள்ளும் பொருட்டு மனித உரிமை ஆணைக்குழு கொழும்பு தலமையகத்திலிருந்து அதிகாரிகள் குழு ஒன்று விரைவில் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்
.
No comments:
Post a Comment