Translate

Tuesday, 21 August 2012

ஜீ.எஸ்.பி வரிச்சலுகை மீளவும் இலங்கைக்கு வழங்கப்பட மாட்டாது: ஐரோப்பிய ஒன்றியம்

Posted Image
மனித உரிமை மீறல்களால் இலங்கைக்கு வழங்கப்படாது விடப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரதிநிதி பெர்னாட் சாவேஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.



கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்களை காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டது.

அத்துடன் பல்வேறு நிபந்தனைகளுடனான விளக்கங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் கோரி இருந்தது. எனினும் இதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்த பதில்களையும் வழங்கவில்லை என சாவேஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வரிசலுகையை மீண்டும் நீடிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://eelampresse.com/?p=6382 

No comments:

Post a Comment