Translate

Thursday 9 August 2012

முஸ்லிம் காங்கிரஸின் இரட்டை வேடத்தை காவியுடை பயங்கரவாதம் குறித்த கருத்து அம்பலப்படுத்துகிறது: ஹெல உறுமய

முஸ்லிம் காங்கிரஸின் இரட்டை வேடத்தை காவியுடை பயங்கரவாதம் குறித்த கருத்து அம்பலப்படுத்துகிறது: ஹெல உறுமய

காவியுடை பயங்கரவாதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தோற்கடிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதை ஜாதிக ஹெல உறுமய விமர்சித்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது.



'வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் இந்த பயங்கரவாதத்தால் வருந்துகின்றனர். இவர்களால் பள்ளிவாசல்களில் அமைதியாக தொழமுடியாது உள்ளத. இந்த றம்ழான் மாதத்தில்கூட தொழுகைக்காக ஒன்று சேர பயப்படும் நிலைமையை அவர்கள் உருவாக்கியுள்ளனர் எனவும் அவர் பேசியிருந்தார். 

அமைச்சர் ஹக்கீமின் இந்த குற்றச்சாட்டு, அவரின் இரட்டை வேடத்தையும் அவரது கட்சியின் கபடத்தனத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது என ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த மேல் மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

'கொழும்பில் சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் ஹக்கீம் பேசும்போது, பௌத்த பிக்குகளுக்கும் முஸ்லிம் பாரம்பரியத்திற்கும் இடையில் உள்ள பாரம்பரியமான நட்பை பற்றி பேசுவார். ஆனால் கிழக்கில்  தமிழில் பேசும்போது அதே பௌத்த பிக்குகளை விமர்சிப்பார். கிழக்கில் பௌத்த பிக்குகளை விமர்சிக்கும்போது, கொழும்பில் முஸ்லிம்களுக்காக நோன்பு திறக்கும் நிகழ்வுகளை பௌத்த பிக்குகள் ஒழுங்குசெய்வர்' என உதய கம்மன்பில கூறினார். 

"தேர்தல் வாக்குகளை பெறுவதற்காக இனக்குரோதத்தை தூண்டிவிடும் ஹக்கீம், முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் கிழக்குக்கு வெளியே வாழ்க்கின்றனர் என்பதை மறக்கக்கூடாது. இவரால் சிங்கவர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட முடியாது என்பதை ஜாதிக ஹெல உறுமய நினைவுபடுத்த விரும்புகிறது.  பௌத்த பிக்குகளுக்கு எதிராக கோபத்தையும் பயத்தையும் தோற்றுவித்து முஸ்லிம்களின் உணர்ச்சியை தூண்டிவிடுவதையே அவர் செய்ய முயல்கிறார் என்பது தெளிவாக தெரிகின்றது. இதனால்தான் அவர் பௌத்த பிக்குகளை எல்.ரி.ரி.ஈயுடன் ஒப்பிடுகின்றார்" என கம்மன்பில கூறினார்.

இவ்விடயம் குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் டெய்லி மிரருடன் பேசுகையில், தனது சொந்த சமயத்தைகூட முறையாக கடைப்பிடிக்காத அமைச்சர்தான் ரவூப் ஹக்கீம் எனக் கூறினார்.

"யுத்தம் நடந்தபோது அவர் நோர்வே நாட்டவரையும் எல்.ரி.ரி.ஈயையும் ஆதரித்தார். இன மோதல் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்பது அவரின் நிலைப்பாடாக இருந்தது. காவியுடை பயங்கரவாதம் உள்ளதென கூறும் அவர், அது எங்கே உள்ளது என்பதையும் கூற வேண்டும். அதன் பயங்கரவாத செயல்கள் எவை என்பதையும் விளக்க வேண்டும். எனவே அவர் அர்த்தமில்லாத அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்காமல் தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும்"  என அவர் கூறினார்.


http://www.tamilmirr...7-18-28-29.html 

No comments:

Post a Comment