பிரான்ஸிற்கு திரும்பிச் செல்வதற்காக் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த பெண்ணொருவர்; இனம் தெரியாதவர்களினால் ஊர்தியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ். சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் சூறாவத்தையைச் சேர்ந்த குறித்த இளம் பெண் பிரான்ஸில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து ஊர்தியில் சென்ற இனம் தெரியாதவர்கள் குறிப்பிட்ட பெண்ணை கடத்திச் சென்றதாக சுன்னாகம் காவல் நிலையத்தில் உறவினர்கள் முறையிட்டுள்ளார்கள். குறிப்பிட்ட கடத்தல் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.
இதேவேளை, கடந்த வாரம் திருமண வீட்டிற்குச் சென்ற கனேடியப் பிரஜை ஒருவரும் வடமராட்சி கரவெட்டியினில் வைத்து சிறீலங்காவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்; கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment