பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு:-
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற பிரதிநிதிகள் இன்று கிழக்கு மாகாண ஆளுனரைச் சந்தித்துள்ளனர்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள 9 பேர் அடங்கிய பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழுவினர் இலங்கை ஜானாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் சந்தித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்து தற்போதைய நிலைமைகள் குறித்து நேரில் அறிந்து கொண்டனர்.
இந்த விஜயத்தின் ஒரு கட்டமாக அவர்கள் இன்று பிற்பகல் 3 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரமவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பானது கிழக்கு மாகாண ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இதன்போது திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழுவினருக்கு காணொலியொன்றும் காண்பிக்கப்பட்டுள்ளது.
பிரிடிஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களின் விஜயம் அமைந்திருந்தது.
இலங்கைப் பாராளுமன்ற பிரதிநிதிகள் பிரித்தானியாவிற்கும், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கும் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிடுதவது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment