இது எனது மற்றொரு நோயாளியினது காலின் போட்டோ.
சின்ன விரலுக்கும் நான்காவது விரலுக்கும் இடையில் தோல் சுருங்கி வெண்மை படர்ந்து அழுக்குப் போலக் காணப்படுகிறது. சற்று அரிப்பு இருக்கும். கெட்ட மணமும் வீசக் கூடும்.
சேற்றுப் புண் எனச் சொல்வார்கள்.
ஆங்கிலத்தில் Athletes Foot எனவும், மருத்துவத்தில் Tinea Pedisஎனவும் வழங்கப்படுகிறது.
இது பங்கஸ் கிருமியால் ஏற்படும் நோயாகும்.
- ஈரலிப்பும் வெப்பமும் கலந்திருக்கும் சூழலில் இது இலகுவாகத் தொற்றி விடும்.
- அடிக்கடி கால் கழுவுவதால் ஏற்படலாம். நீச்சலில் நீண்ட நேரம் ஈடுபடுதல்,
- வெப்பமான காலநிலையில் வியர்க்கும்போது நீண்ட நேரம் காலணி அணிந்திருத்தல்,
- அதிலும் முக்கியமாக வியர்வையை ஊறிஞ்சாத நைலோன் காலணிகளை அணிதல் ஆகியன பங்கஸ் தொற்றுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும்.
- விரல்களுக்கு இடையேயான இடைவெளிகள் மிக நெருக்கமாக இருப்பதும் காரணமாகலாம்.
- இதனால் ரூமட்ரொயிட் ஆத்திரைடிஸ், ஒஸ்டியோ ஆத்திரைடிஸ் இருப்பவர்கள் விரல்கள் கோணி இறுக’கமாக இருப்பதால் அதிகம் பாதிப்படைவர்.
Clotrimazole, Imidazole, Miconazole, Econazole, Terbinafine போன்ற கிறீம் வகைகளை உபயோகிப்பதன் மூலம் குணமாக்கலாம்.
மெபைல் கமராவில் எடுத்த மற்றொரு நோயாளியினது காலின் போட்டோ.
அடிக்கடி இத்தொற்று ஏற்படுபவர்கள் கால்கள் நனைந்த பின்னர் ஈரத்தை ஒற்றி உலரவைப்பது அவசியம். இங்கு ஈரத்தைத் துடைப்பதற்கு உபயோகித்த துணியை வெறு இடங்களைத் துடைக்கப் பயன்படுத்த வேண்டாம். இல்லையேல் உடலின் ஏனைய இடங்களிலும் பங்கஸ் தொற்று ஏற்படலாம்.
காலணி அணியும் போது கால்களுக்கடையில் மேற் கூறிய மருந்துகளை பவுடராக போடுவாதன் மூலமும் நோய் தொற்றுவதைக் குறைக்கலாம்.
மூடிய காலணிகளுக்குப் பதில் திறந்த காலணிகளை அணிவதும் உதவலாம்.
இதைக் குணப்படுத்த ஒருவர் தனது கால்களை முக்கியமாகப் பாதங்களை ஈரலிப்பின்றியும் சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியம்.
செருப்பு சப்பாத்து ஆகியன தோலாலானவையாக இருப்பது நல்லது. ஏனெனில் அவை காற்றோட்டததைத் தடை செய்யமாட்டா.
சண்டலஸ், டெனிஸ் சூ போன்றவற்றை சுடுநீரில் கழுவுவது உதவும்.
சோக்ஸ் அணிபவர்கள் வியர்வையை உறிஞ்சி கால்களை ஈரலிப்பின்றி வைத்திருக்கக் கூடிய பருத்தியிலான சொக்ஸ் அணிய வேண்டும்.
மற்றவர்களின் காலணி, காலுறை போன்றவற்றை ஒருபோதும் அணியக் கூடாது.
மருத்துவ ஆலோசனை இன்றி கண்ட கண்ட சிறீம் மருந்துகளை உபயோகிக்கக் கூடாது. ஸ்டிரோயிட் வகை மருந்துகள் நோயைத் தீவிரமாக்கிவிடும்.
நோயைக் கவனியாது விட்டால் அதில் பக்டீரியா கிருமிகள் தொற்றி இவை மேலே பரவிசெலுலைடிஸ் Cellulitis போன்ற கடுமையான நோய்களைக் கொண்டு வரலாம்.
No comments:
Post a Comment