Translate

Monday, 27 August 2012

பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த செந்தூரன் பொலிஸாரால் ஆஸ்பத்திரியில் அனுமதி

 
பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமிற்கு நேற்றிரவு விரைந்து சென்ற பொலிஸார், அங்கு உண்ணாவிரதம் இருந்து வந்த செந்தூரனை வானில் ஏற்றிக்கொண்டு சென்று சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சோ்த்தனர்.


தமிழ்நாட்டுக்கு உரிய ஆவணங்கள் இன்றி கடல் வழியாக வந்த இலங்கை அகதிகளை பொலிஸார் கைது செய்து செங்கல்பட்டு சிறப
்பு அகதிகள் முகாமில் அடைத்து வைத்தனர்.

அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் செந்தூரன் என்பவரை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமிற்கு மாற்றினார்கள்.

சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று செந்தூரன் கடந்த 6-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.

கடந்த சில நாட்களாக தண்ணீர் கூட பருகாமல் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

அவரிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை செந்தூரனின் உடல் நலம் குறித்து டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர்.

இதனையடுத்து நேற்றிரவு பொலிஸார் விரைந்து சென்று உண்ணாவிரதம் இருந்து வந்த செந்தூரனை வானில் ஏற்றிக்கொண்டு சென்று சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

No comments:

Post a Comment