Translate

Monday, 27 August 2012

மஹிந்த பேசவிருந்த மேடை திடீரென உடைந்து வீழந்ததால் அம்பாறையில் பெரும் பரபரப்பு


மஹிந்த பேசவிருந்த மேடை திடீரென உடைந்து வீழந்ததால் அம்பாறையில் பெரும் பரபரப்பு
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை இன்று முற்றாக உடைந்து வீழ்ந்துள்ளது. அம்பாறையில் இடம்பெற்ற இச் சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கிழக்கு மாகாண சபைத் தேர்தலையொட்டி அம்பாறையில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் மஹிந்தர ராஜபக்ச உரையாற்றவிருந்தார்.

அதற்காக அலங்காரங்களுடன் மேடை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மேடையே இன்று காலையில் திடீரென உடைந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து குறித்த மேடையிலிருந்து சுமார் 300 மீற்றர் சுற்று வட்டத்துக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் தற்போது சுற்றி வளைத்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இலங்கையின் மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கலந்து கொள்வதற்காக அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடை ஒன்றும் இவ்வாறு உடைந்து வீழ்ந்ததும், அதன் பின்னரான தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியைத் தழுவியதுடன் அரசியலில் அவரின் செல்வாக்கு முற்றாக மழுங்கடிக்கப்பட்டதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இச்சம்பவத்தை நினைவு கூர்ந்த அம்பாறை வாழ் மக்கள் மஹிந்த ராஜபக்சவுக்கும் இவ்வாறான நிலை ஏற்படப் போவதாக பேசி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment