இன்று சர்வதேசத்தின் வாசற்படியில் தட்டிக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான வழி கிழக்கு மாகாண மக்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று, சாகாமம் வீதியில் கூட்டமைப்பின் வேட்பாளர் சின்னையா சியாம் சுந்தரின் கட்சி அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
நல்லிணக்க ஆணைக் குழுவில் இருக்கின்ற பரிந்து ரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஐ.நா. சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தபோது ஆதரவாக இருந்த வல்லர_களான அமெரிக்கா, இந்தியா உட்பட 25 நாடுகள் பரிந்துரை களை நடைமுறைப் படுத்த வேண்டுமெனக் கொடுத்த அழுத்தம் இப்பொழுது இருக் கிறது. இந்த அழுத்தம் இலங்கை அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அழுத்தத்தில் இருந்து அரச் தப்புவதற்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை கையிலே எடுத்துள்ளது.
ஆகவே, இந்த நெருக்கடிக்கு எந்த வகையில் பதில் கொடுக்க வேண்டும் என்பது கிழக்கு மாகாண தமிழ் மக்கள் எடுக்கின்ற முடிவாக இருந்து கொண்டிருக்கின்றது. கடந்த 4 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் வீதி அபிவிருத்தி, உள்கட்டுமானம், பாலம், குளம், உள்வீதிகள் போன்றவைகளை புனரமைப் பதற்கு ஜப்பான், கொரியா மற் றும் ஆசிய அபிவிருத்தி வங்கி, பிரான்ஸ், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனம் என் பன நிதியுதவி வழங்கியிருந் தன. வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அபிவிருத்திக்காக கொடுக்கப் பட்ட பல மில்லியன் ரூபா வைக் கொண்டே இந்தப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள் ளப்பட்டன. இலங்கை அர சால் எந்தவிதமான நிதி ஒதுக்கீடும் ஒதுக்கப்படவில்லை என்றார்.
No comments:
Post a Comment