Translate

Friday, 24 August 2012

ஈழத்தமிழர் துயரம் கண்டு இன்னும் ஏன் ஜெயலலிதா பொங்கியெழவில்லை; கேள்வியெழுப்புகிறார் ஜெயலலிதாவின் முன்னாள் தொண்டர் குஷ்பூ

ஈழத்தமிழர் துயரம் கண்டு இன்னும் ஏன் ஜெயலலிதா பொங்கியெழவில்லை; கேள்வியெழுப்புகிறார் ஜெயலலிதாவின் முன்னாள் தொண்டர் குஷ்பூ
news
எங்கோ பிறந்து தமிழகத்தில் வளர்ந்த எனக்கே ஈழத்தமிழர் துயரம் கண்டு இரத்தம் கொதிக்கையில் தமிழகத்தின் முதல்வராக இருந்துகொண்டு ஏன் ஜெயலலிதா வாய் மூடி மௌனியாக உள்ளார் என முன்னாள் அ.தி.மு.க தொண்டரும் இன்னாள் தி.மு.க தொண்டருமான பிரபல நடிகை குஷ்பூ சுந்தர் கேள்வியெழுப்பியுள்ளார்.


தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி நடத்திய டெசோ மாநாட்டு தீர்மானங்கள் தொடர்பான விளக்கப் பொதுக்கூட்டம் மதுரை பாலரங்காபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு பேசியபோதே, குஷ்பூ இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அவர் அங்கு உரையாற்றுகையில்,
மதுரையில் டெசோ மாநாடு நடந்து 26 ஆண்டுகள் கழித்து சென்னையில் நடந்த மாநாட்டு தீர்மானம் குறித்து பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. ஈழத்தமிழர்களுக்காக இன்னும் போராடி கொண்டுள்ளோம். ஏன் என்று தெரியவில்லை. கலைஞர் என்ற ஒரு தனிமனிதர் எத்தனை ஆண்டுகள் போராட முடியும். தலைவர் கலைஞரின் ஈழத்தமிழர்களுக்கான போராட்டம் 56 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி விட்டது.

கலைஞர் சொல்வது போல இலங்கைத் தமிழர்கள் அங்கே இரண்டாம் தர குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். ஈழத்தமிழர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் தந்தை செல்வா. அவரையும், தந்தை அமிர்தலிங்கத்தையும் அழைத்து இலங்கை தமிழர்களின் பிரச்சினை குறித்து தமிழக மக்களுக்கு புரிய வைத்தவர்கள் தலைவர் அண்ணா, கலைஞர் ஆவார்கள். அதன்பிறகே இலங்கை தமிழர்களின் நிலை உலகுக்கு தெரியவந்தது. ஜெயலலிதா அம்மையார் ஈழத்மிழர்களுக்காக இது வரை குரல் கொடுத்ததில்லை. ஏன் அ.தி.மு.கவை சேர்ந்த ஒருவர் கூட குரல் கொடுத்ததில்லை.

ஆனால் டெசோ மாநாட்டுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த மாநாட்டை முதலில் எதிர்த்தவர் இலங்கை ஜனாதிபதி. அதற்கடுத்து ஜெயலலிதா அம்மையார். விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியர் தான் ஜெயலலிதா. இந்த குற்ற உணர்ச்சி அ.தி.மு.கவில் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும். போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்னவர்தான் அவர். எங்கோ பிறந்து வளர்ந்து, 26 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழும் எனக்கே இலங்கை தமிழர்களின் பிரச்சினை குறித்து ரத்தம் கொதிக்கும்போது இவர்களுக்கு ஏன் உணர்ச்சி வரவில்லை என்று தெரியவில்லை. தமிழக மக்களுக்கும் இவர்கள் ஒன்றும் செய்யவில்லை.

எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்வது, வாய்தா வாங்குவது. ஆனால் இன்னும் 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் உதயசூரியன் ஆட்சிக்கு வரும். அப்போது தமிழகத்தின் ஒரே கட்சியாக தி.மு.க மட்டுமே இருக்கும் என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். டெசோ மாநாட்டுக்கு எத்தனைஇடையூறுகள். போலீசார் நிறைய இடை ïறுகள் செய்து விட்டனர். அவர்கள் தனி மனிதர்களுக்கு பயந்து வேலைபார்ப்பதை விட்டுவிட்டு, மனசாட்சிக்கு பயந்து வேலைபார்க்க வேண்டும். என்றார்.

No comments:

Post a Comment