Translate

Friday, 24 August 2012

அனைவரும் சமாதானமாக வாழ அரசியல் தீர்வு ஒன்று அவசியம் அதனை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுங்கள்; யசூசியிடம் யாழ். மாவட்ட முஸ்லீம் பிரதிநிதி

news
யுத்தம் முடிவுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தி மீள் குடியேற்றத்துக்காக 500 முஸ்லீம் குடும்பங்கள் மட்டுமே வந்துள்ளோம் அதற்கான காரணம் மீள் குடியேற்றத்தினை மேற்கொள்வதற்கான எந்தவொரு அடிப்படை வசதிகளும் 
செய்து கொடுக்கப்படவில்லை. இது மூஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள் குடியேறும் 
தமிழ் மக்கள் அனைவருக்கும் இந் நிலையே காணப்படுகின்றது என யாழ். மாவட்ட முஸ்லீம் பிரதிநிதி மெளலவி சுபியான் தெரிவித்தார்.
 
யாழிற்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய விசேட துதுவர் யசூசி ஆகாசிக்கும்  சர்வமதத் தலைவர்கள் மற்றும் சீவில் சமுக பிரதிநிதிகளுக்குமிடையில் யாழ் ஆயர் இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது அதல் கலந்து கொண்டு  
கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
 
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 
 
உண்மையில் தாங்களின் இவ் வருகையானது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. யாழ்ப்பாணத்தில் நாங்கள் எல்லா மதத்தவர்களும்
இப்போது ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகின்றோம்.
 
எனினும் நாங்கள் 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் பல வந்தமாக யாழில் இருந்து வெளியேற்றபட்டோம். இருப்பினும் 
அந்த நேரத்தில் நாங்கள் மாவட்டத்தை விட்டுச் செல்லும் போது யாரும் எம்மை கண்டு கொள்ளவில்லை.
 
அத்துடன் எந்தவொரு மதச்சாரர்களோ அல்லது மக்களோ அல்லது அரசியல்வாதிகளோ எங்களை வெளியேற்றும்
போது வெளியேற்றியவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை.
 
ஏனெனில் அந்த நேரத்தில் அவ்வறானதொரு சூழ் நிலை காணப்படவில்லை. அதனால் இங்கு இருந்தவர்களினால் எதயும் செய்ய முடியாத நிலை காணப்பட்டது.
 
ஆனால் தற்பொழுது நாங்கள் எல்லோரும் மகழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் இங்கிருந்து வெளியேறும்போது 5000 பேர் சமதானம் ஏற்பட்டு மீண்டும் வரும் வேளையில் 8000 பேராக விருத்தியடைந்தள்ளோம்.
ஆனால் தற்பொழுது மீள் குடியேற்றத்துக்காக 500 குடும்பம் மட்டுமே வந்துள்ளோம்.
 
ஏனெனில் மீள் குடியேற்றத்துக்காக  எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. 
 
இது மூஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல மீள் குடியேற்றம் செய்யப்படுகின்ற தமிழ் மக்களுக்கும் இவ்வறான நிலையே காணப்படுகின்றது. 
 
எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மீள் குடியேற்றத்தினை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 
 
அத்துடன் மக்கள் மீண்டும் சுகுமான நிலைக்கு திரும்பி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அதற்கு ஒரு நிலையான தீர்வு அவசியமாகும். அதனைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 
இதன்போது யாழ் மாவட்டத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இன்று மீண்டும் மீள் குடியேறி எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலான அறிக்கை ஓன்றினையும் யசூசி ஆகாஷியிடம் மௌலவி சுபியான் கையாளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment