வடதமிழீழத்தில் சிங்களக் கைக்கூலிகள் மூவர் கொலை! அதிர்ச்சியில் சிங்கள இராணுவம்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.08.2012) இரவு இடம்பெற்ற இச்சம்பவங்களில் பலியான மூவரும் கிளிநொச்சி வட்டக்கச்சி, முல்லைத்தீவு விசுவமடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகின்றது.
இவர்களில் வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த சிவராசா (45) என்பவர் யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் வைத்து கோடாரியால் கொத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரது உடலம், எரிந்து சாம்பராகிய நிலையில் காணப்பட்ட இவரது வீட்டிலிருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதேபோன்று விசுவமடு ரெட்பாணா பகுதியில் வேலு விஜயகுமார் (33) என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட இவரது உடலின் கழுத்துப் பகுதியில் நெரித்துக் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று தடவைகள் திருமணம் புரிந்த இவர், சிங்களப் படைகளுடன் இணைந்து பெண்களுடன் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு வந்திருந்தார்.
இதேபாணியில் விசுவமடு நெத்தலியாறு பகுதியில் அருணாசலம் இராமநாதன் (73) என்பவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்ப் பெண்களை பாலியல் தொழிலாளிகளாக சிங்களப் படைகளுக்கு ஏற்பாடு செய்துகொடுக்கும் முகவராக இவர் இயங்கி வந்துள்ளார்.
ஒரே நாளில், ஒரே பாணியில் இவர்கள் மூவரும் கொலை செய்யப்பட்டமை சிங்களப் படைகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment