Translate

Monday, 6 August 2012

இந்தியாவின் எதிரி நாடுகளுடனான நட்புறவே இலங்கைக்கு பாதுகாப்பு என்கிறார் குணதாஸ


இந்தியாவின் எதிரி நாடுகளுடனான நட்புறவே இலங்கைக்கு பாதுகாப்பு என்கிறார் குணதாஸ
 
இந்தியாவுடனான நட்புறவை அரசாங்கம் துண்டித்துவிட்டு அதன் எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நட்புறவை பலப்படுத்த வேண்டும் ௭ன தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத் தியுள்ளது.


இலங்கையுடன் (சீபா) பரந்தளவிலான வர்த் தக உடன்படிக்கையை செய்து கொள் வது மற்றும் திருமலையில் பொருளாதார வல யம் அமைக்கப்படுவது தொடர்
பில் இந் திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையிலான குழு இலங்கைக்கு விஜ யத்தை மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடத்துவது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர இதனைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் பிரிவினையை ஊக்குவி த் து விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ‘பால் கொடுத்து வளர்த்தது இந்தியாவாகும். பிரபாகரனை பயன்படுத்தி வடக்கையும் கிழக்கையும் இந்தியாவின் ‘காலனியாக் கும்’ திட்டம் தோல்வி கண்டுவிட்டது.

௭னவே வேறுவிதத்தில் ௭மது நாட்டை ஆக்கிரமிக்கும் சதித்திட்டத்தை ஆரம்பித் துள் ளது.

‘சீபா’ உடன்படிக்கை செய்துகொள் ள ப்பட்டால் அது ௭ம் நாட்டைப் பாதி க் கு ம் . இந்தியாவின் பொருட்கள் முழுமையாக இலங்கையின் சந்தையை ஆக்கிர மித்து க் கொ ள்ளும்.

இதனால் இந்தியாவில் ௭மக்கான சந்தை வாய்ப்புக்கள் கிடைக்கப் போவதில்லை. அத்துடன், திருமலையில் வர்த்தக வலயம் அமைக்கப்பட்டாலும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

நாட்டை பிரிக்கும் முயற்சி தோல்வி கண்ட நிலையில் அமெரிக்காவின் உதவி யு டன் பொருளாதார ரீதியில் இலங்கையை ஆக் கிரமிக்கும் திட்டத்தை இந்தியா முன் னெடுத்துள்ளது.

௭னவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இவ்விடயம் தொ டர்பில் கவனத்துடன் செயற்பட வே ண் டும். புதிய நாடுகளுடன் வரலாற்றுக் காலம் தொடக்கம் இந்தியா ௭மக்கு ௭திராகவே செயல்பட்டது. இன் றும் இதே நிலையே நிலவுகிறது.

௭னவே அரசாங்கம் இந்தியாவுடனான நட்புறவை கைவிட வேண்டும். சீனா, பாகிஸ்தான் போன்ற புதிய நாடு களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் ௭திரி நாடுகளுடனான நட்பு றவே ௭மது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ௭ன்றும் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.




1111111111111111111111111111111111

சீனாவின் காதல் சிக்கலில் தள்ளுமா?

20 12 2011

இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீடுகள் அதிகரிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று கூறியிருந்தார் இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய. இவர் இதைச் சொன்னது கொழும்பில் அல்ல, இந்தியாவில் அதுவும் டேராடூனில் உள்ள இந்தியா இராணுவத்தின் பயிற்சித் தலைமையகத்தில் தான் இதைக் கூறியுள்ளார்.

ஒரு வாரகால இந்தியப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, டேராடூனில் பயிற்சி பெற்று வெளியேறிய இந்தியப் படையினரின் அணிவகுப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னரே அவர் இவ்வாறு கூறியிருந்தார். இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீடுகள் பற்றிய, அவரது இந்தக் கருத்து இந்தியாவுக்கு திருப்தியைக் கொடுத்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால், சீனா பற்றி இந்தியா அதிகமாகவே கவலை கொள்ளத் தொடங்கியுள்ளது. இலங்கையில் சீனாவின் தலையீடுகள், முதலீடுகள் அதிகரித்து வருவது குறித்து இந்தியா கலக்கமடைவது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்வதில் தான் இந்தியாவுக்கு கௌரவப் பிரச்சினையாக உள்ளது.

பல சந்தர்ப்பங்களில் இந்திய இராணுவ, விமானப்படைத் தளபதிகள் சீனத் தலையீடுகள் குறித்து அச்சம் வெளியிட்டிருந்தாலும், இராஜதந்திரிகளோ, அரசியல் தலைவர்களோ அப்படி ஒன்றும் இல்லை என்று காட்டவே முனைகின்றனர்.

அண்மையில் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் இலங்கைக்கு வந்திருந்தார். யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் இலங்கை விவகாரம் சார்ந்த, சிறப்புரைகளை அவர் நிகழ்த்தியிருந்தார்.இதன்போது அவர் கூறிய கருத்துகளில் முக்கியமானது சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலைப்படவில்லை என்பதாகும். அம்பாந்தோட்டையில் சீனா அமைக்கும் துறைமுகம் குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை. சீனாவின் முதலீடுகளுக்குப் போட்டியாக இலங்கையில் இந்தியா முதலீகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறியிருந்தார். அவரது உரை சீனாவுக்குப் போட்டியாக நாம் எதையும் செய்யவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தது.

ஆனால் உண்மை அதுவாக இல்லை என்பது மட்டும் தெளிவு.

இலங்கையில் இந்தியா மேற்கொள்கின்ற எல்லாத் திட்டங்களுமே சீனாவுக்குப் போட்டியாக - சீனாவின் தலையீட்டைக் குறைப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கை அரசுடன் இந்தியா கொண்டுள்ள நட்புறவும், இலங்கை விவகாரத்தில் பின்பற்றப்படும் அணுகுமுறையும் சீனாவைச் சார்ந்தே தீர்மானிக்கப்படுகின்றன. எங்கே சீனா எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு போய் விடுமோ என்ற பயம் இந்தியாவுக்கு வந்து விட்டது.

முன்னர் ஜே.ஆர் காலத்தில் இதுபோன்று தான் இந்தியாவுக்கு ஒரு பயம் இருந்தது. அமெரிக்கா வந்து இலங்கையில் கால்வைத்து விடுமோ என்பதே அந்தப் பயம். அதற்காகத் தான் இந்தியா, தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்தது. பின்னர் ஜே.ஆரைப் பயமுறுத்தி இலங்கைக்குத் தனது படைகளை அனுப்பியது. பின்னர் இந்தியா கையைச் சுட்டுக் கொண்டு வெளியே போனதுடன், அமெரிக்காவின் கவனமும் வேறுபக்கம் திரும்பி விட்டது. விடுதலைப் புலிகள் விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்த மூலோபாயம், விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவியுள்ளது. ஆனால் சீனாவை இலங்கைக்கு அருகில் கொண்டு வந்து விட்டது.

சீனா ஆயுத உதவிகளைக் கொடுக்க, இலங்கைப் படையினர் புலி வேட்டையாடியதை இந்தியா வேடிக்கை பார்த்தது. இப்போது சீனாவின் செல்வாக்கு இலங்கையில் வளர்ந்து விட்ட நிலையில்இ இந்தியா அதையும் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

பிராந்திய வல்லரசாக இருந்தாலும் குட்டித் தீவான இலங்கையை தட்டிக் கேட்கவோ, அதட்டிப் பேசவோ முடியாத நிலையில் இந்தியா இருக்கிறது. இந்த நிலையை வெளிப்படையாகக் கூற முடியாத நிலையில் இந்திய இராஜதந்திரிகள் இருக்கின்றனர் என்பதே உண்மை. விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போலவே அவர்கள் கருத்து வெளியிடுகின்றனர். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினாலோ சீனாவின் தலையிடுகளாலோ இந்தியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை இந்தியா உண்மையில் கருதுமாஎன்பதே சந்தேகம்தான். தனது கரையில் இருந்து மிகநெருக்கமாக, சீனா தனது பொருளாதார நலன்களை நிலை நிறுத்துவதை இந்தியாவினால் எப்படி அச்சமின்றி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அப்படி இருக்கின்ற ஒரு சூழ்நிலை இருந்தால் இந்தியா கையாலாகாத நிலையை அடைந்து விட்டது என்றே பொருள்.

இலங்கை விவகாரத்தில் மட்டுமல்ல மாலைதீவு, சீஷெல்ஸ் விவகாரங்களிலும் தான் இந்தியா கோட்டை விட்டு நிற்கிறது. இந்தியாவின் காலடியில் இருந்த மாலைதீவில் தூதரகத்தை அமைத்து விட்டது சீனா. அடுத்து அங்கு நீர்மூழ்கி கப்பல்தளம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் சீஷெல்சுடன் உடன்பாடு செய்து கொண்டுள்ள சீனா, அங்கு கடற்படைத் தளத்தை அமைக்கவுள்ளது. சீனா அமைக்கப் போகும் முதலாவது கடல் கடந்த தளம் இதுவாகும். இந்தக் கடற்படைத்தளம் பயிற்சி மற்றும் ஆயுத தளபாட விநியோக வசதிகளைக் கொண்டதாக அமையவுள்ளது. அதைவிட சீனா கட்டி வரும் மிகப்பெரிய விமானந்தாங்கிக் கப்பலையும் இங்கேயே நிறுத்தப் போவதான தகவல்களும் உள்ளன.

இந்தியப் பெருங்கடல் என்பது இந்தியாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஒன்றாக இருந்த நிலை இப்போது மாறிவிட்டது. 1988 இல் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கப்பல் ஒன்றின் மூலம் மாலைதீவுக்குள் நுழைந்து ஆட்சியைப் பிடிக்க முனைந்தபோது, அடுத்த சில மணி நேரங்களில் இந்தியா தனது படைகளை அனுப்பி ஆட்சியைக் காப்பாற்றியது. அதற்குப் பிறகு எல்லாமே இந்தியா தான் என்றிருந்த மாலைதீவு, இப்போது சீனாவின் பக்கம் சாயத் தொடங்கி விட்டது.

இந்தியாவுக்கு மேற்கே இப்போது அதிகரித்து வரும் சீனத் தலையீடுகள் ஒரு தலைவலியாகவே மாறி வருகிறது. இப்பின்னணியில் தான் இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இந்தியாவில் நின்று கொண்டு சொல்கிறார், சீனாவின் தலையீடுகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்று. அவர் இதனைக் கூறிய போது சீன இராணுவ ஜெனரல் ஒருவர் ஆறு அதிகாரிகள் சகிதம் இந்தியாவில் தங்கியிருந்தார். இருதரப்பு இராணுவ மட்டப் பேச்சுக்களை நடத்தவே இவர்கள் அங்கு சென்றிருந்தனர். இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மட்டும், சீனா குறித்து இப்படிக் கூறவில்லை.இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூட, இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா திட்டமிடவில்லை என்றே நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இந்திய பிரதமரின் இந்தக் கருத்து இந்தியாவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இப்படித் தான் 1962இல் ஜவஹர்லால் நேரு பஞ்சசீலக் கொள்கை, சீனா தமது நண்பன் என்று கூறிக் கொண்டிருக்க, சீனாவின் செம்படைகள் இந்தியாவுக்குள் படையெடுத்தன. அதேநிலைக்குத் தான் மன்மோகன்சிங்கின் கருத்தும் ஒப்பிடப்படுகிறது. இப்போது இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த சீனா திட்டமிடுகிறதா- இல்லையா என்பதல்ல விவகாரம். இந்தியாவை முற்றுகையிட- அதனை செயலற்ற நிலைக்குள் தள்ளிவிட- சீனா வியூகம் அமைக்கிறது என்பதே முக்கியமான விடயம்.

சீனாவிடம் இருந்து பாதுகாப்பு ரீதியான அச்சுறுத்தல் இறுகிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் இந்தியாவின் இராஜத்தந்திம் எதற்காகப் போலிவேடம் போடுகிறது என்பதே கேள்வியாக உள்ளது.

சீனா விவகாரத்தில் அடங்கிப் போக நினைக்கிறதா அல்லது அடக்க முடியாது என்று அச்சம் கொள்கிறதா?

எதுஎவ்வாறாயினும் இந்தியா, சீனா இடையில் ஆதிக்கப் போட்டி இந்தியப் பெருங்கடலில் தீவிரமடையும் போது அதன் பாதிப்பு இலங்கையையும் விட்டு வைக்காது. ஏனென்றால் இந்த இரு நாடுகளினதும் செல்வாக்குப் பரப்பினுள் தான் இலங்கை இருக்கிறது. சீனாவின் பக்கமே இலங்கை அதிகம் சாய்ந்துள்ளதால், இந்தியாவின் வெறுப்புத் தீவிரமாகவே இருக்கும். இவையெல்லாம் இப்போதைக்கு பிரச்சினையாகத் தோன்றாது. ஆனால் அதுவே நிரந்தரமானதாக இருக்காது.

ஒரு உறைக்குள் ஒரு வாள் தான் இருக்க முடியும். அதுபோல இதுவரை இந்தியாவின் வாள் மட்டுமே இருந்த இந்தியப் பெருங்கடல் என்ற உறைக்குள் இப்போது சீனா என்ற வாளும் நுழையப் பார்க்கிறது. அத்தகைய சூழலில் இந்தியப் பெருங்கடல் பதற்றம் நிறைந்த பிராந்தியமாக உருவெடுக்கலாம். அத்தகையதொரு தருணத்தின் தான் இலங்கை வருத்தம் கொள்ளும் நிலை ஏற்படவும்கூடும்.


நன்றி தமிழ் இணையங்கள்

No comments:

Post a Comment