அம்பாறையில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழர்களிடம் இருந்து அபகரிப்பு .
1967ம் ஆண்டுக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தமிழர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் இருந்து வெளியாகும் 'ருத் டைவ்' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிவுகளையும் சேர்ந்த 3500 குடும்பங்கள் இன்னமும் இடம்பெயர்ந்து வாழ்வதாக சிறிலங்கா

அரச நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1967 ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் 6500 ஏக்கர் நெல் வயல்களும் 3500 ஏக்கர் தென்னந் தோட்டங்களும் 2000 ஏக்கர் கரும்புத் தோட்டங்களும் தமிழர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டுள்ளன.
2007ம் ஆண்டு சிறிலங்கா இராணுவம் கிழக்கை கைப்பற்றிய பின்னர் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை புதிய பௌத்த விகாரைகளை இந்தப் பகுதிகளில் அமைத்துள்ளது.
தமிழர்களின் 20இற்கும் அதிகமான சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment