Translate

Thursday 9 August 2012

தவறுதல் நடந்துவிட்டது! கடவுச்சீட்டை வழங்குமாறு இந்திய வீசா அலுவலர் அறிவித்தார்! விக்ரமபாகு

தவறுதல் நடந்துவிட்டது! கடவுச்சீட்டை வழங்குமாறு இந்திய வீசா அலுவலர் அறிவித்தார்! விக்ரமபாகு
 
தவறுதலாக வீசா மறுக்கப்பட்டுள்ளதாகவும், கடவுச்சீட்டை வழங்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகராலய கொன்சியூல் அதிகாரி தனக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் டாக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.


டெசோ மாநாட்டிற்கு இந்திய மத்திய அரசாங்கம் அனுசரணை வழங்குகிறது. சோனியா காந்தியின் அனுசரணையுடனேயே இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

சென்னையில் இம்மாதம் 12ம் திகதி டொசோ மாநாடு நடைபெறவுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் வீசா வழங்கப்படவில்லை.

வீசா வழங்கப்படாமை குறித்து தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அறிவித்தேன்.

இது தொடர்பில் மத்திய அராங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கருணாநிதி எனக்கு அறிவித்தார்.

தவறுதலாக வீசா மறுக்கப்பட்டுள்ளதாகவும், கடவுச் சீட்டை வழங்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகராலய கொன்சியூல் அதிகாரி எனக்கு தொலைபேசி மூலம் அறிவித்தார்.

எனினும், இந்த மாநாட்டில் நான் கலந்து கொள்வதனை தடுக்க பலம் பொருந்திய சக்திகள் முயற்சித்து வருவதாகவே கருதுகின்றேன்.

இந்த வீசா மறுப்பு பின்னணியில் பலம்பொருந்தியவர்கள் இருக்கக் கூடும் என விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment