Translate

Monday, 20 August 2012

யாழ்ப்பாணத்தில் சாதனை படைக்கும் தமிழ் பெண்களும் சிறுவர்களும்


யாழ்ப்பாணத்தில் அதிகமான சிறுவர்கள் மதுபழக்கத்திற்கும் புகைத்தல் பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளனர் என யாழ். மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி என். கிருபாகரன் தெரிவித்தார். 21 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு சிகரெட்டுக்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் 16 வர்த்தகர்களுக்கு எதிராக யாழ். நீதிமன்றத்தில் எதிர்வரும் வாரங்களில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலக அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போதே 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட்டுக்களை விற்பனை வர்த்தகர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். 16 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் மட்டுமன்றி சில பெண்களும் புகைப்பழகத்தை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மாணவர்கள், மற்றும் சிறுவர்கள் சிகரட் புகைப்பழக்கம் மற்றும் கச்சா, கிரோயின் போன்ற ஆபத்தான போதைப்பொருள்களையும் பாவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post a Comment