ஆனையிறவில் பொது மக்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை ஆக்கிரமித்திருக்கும் சிறிலங்கா கடற்படையினர் அந்தப் பகுதி தமக்குச் சொந்தமானது என அறிவித்திருக்கின்றனர். கடற்படையினர் அங்கு முகாம் ஒன்றை அமைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆனையிறவு உப்பளத்திற்கு அருகில் உள்ள மக்களின் காணிகளே கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மீள்குடியமர்வுக்காகப் பதிவுசெய்து விட்டுக் காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை கண்டாவளை பிரதேச செயலகம் மேற்கொண்டு வந்த நிலையில், இந்த நிலம் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் 90 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன என்று பிரதேச செயலகப் பதிவுகள் கூறுகின்றன.
இந்தப் பகுதியில் இருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கடந்த மார்ச் மாதம் அப்பகுதி பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து மீள்குடியமர்வுக்காக பதிவுகளை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்தப் பகுதியை துப்புரவு செய்த கடற்படையினர், ‘இது கடற்படைக்குச் சொந்தமான நிலம்” என்ற அறிவித்தல் பலகையை நட்டுள்ளனர்.
No comments:
Post a Comment