லண்டனில் இருந்து பல்கலைக்கழக விடுமுறைக்கு இலங்கை சென்ற மாணவன் ஒருவர், விடுதலைப்புலி சந்தேக நபர் என்று தடுத்து வைத்து விசாரணை செய்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையை சேந்த துவாரகன் நகேந்திரறாஜா என்ற தமிழ் இளைஞர், லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுவருகிறார்.
இவர், லண்டனில் இருந்து கட்டார் நாட்டு விமானத்தில் தனது கோடைகால விடுமுறைக்கு இலங்கை சென்றிருந்த வேளை, புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைத்து விசாரிக்கபட்டுள்ளார்.
விமான நிலையத்தில் நின்ற சில அதிகாரிகள் குறித்த இளைஞனை இடைமறித்து, விடுதலைப் புலியா? லண்டனில் புலிகளின் ஆர்பாட்டங்களில் கலந்து கொள்பவன் நீ என்று மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல வினாக்களை குறித்த இளைஞனிடம் அவ்வதிகாரிகள் வினவியதுடன், பல மணி நேரங்களாக தடுத்து வைத்து மிரட்டியுள்ளனர்.
குறித்த இளைஞன் தான் எவ்வித செயல்களிலும் சம்பந்தபடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரின் அனைத்து ஆவணங்களும் பிரதி எடுத்துள்ளனர்.
பின்னர், தமது விசேட பிரிவினர் விசாரணைக்கு அழைக்கும்போது வரவேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைக்கு உட்படுத்த வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment