கடுமையான பதிவுகளால் ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் 'பேஸ் புக்" கணக்கு
தி.மு.க. தலைவர் கருணாநிதியின், 'பேஸ் புக்" கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க. தலைவர் கருணாநிதி, 'கலைஞர் கருணாநிதி" என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை ஆரம்பித்தார்.
ஆரம்பித்த நாள் அன்றே சுமார், 2,700 பேர் அந்தப் பக்கத்தில் இணைந்தனர். மறு நாளான நேற்று மாலை வரை, சுமார் 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்திருந்தனர். கருணாநிதியின் 'பேஸ் புக்" பக்கத்தில் 'டெசோ" மாநாட்டுத் தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன.
நேற்றுக் காலை முதலே கருணாநிதியின் பக்கத்தில் இணைந்த புதியவர்கள் பலர், அவருடைய அறிக்கைகள், 'டெசோ" மாநாடு, ஈழப் பிரச்சினையில் அவருடைய நிலைப்பாடு, குடும்ப அரசியல் என கருணாநிதி குறித்து கடுமையான எதிர்ப்புக் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். அதில், கருணாநிதியை தனிப்பட்ட முறையில் தாக்கி மிகக் கடுமையான பதிவுகள் பதியப்பட்டன.
இந்தப் பதிவுகளுக்கு இந்த பக்கத்தில் இணைந்திருந்த பல தி.மு.க.வினரும் பதிலடி தந்தபடி இருந்தனர். இருப்பினும் ஒரு கட்டத்திற்கு மேல் கருணாநிதியைப் பற்றி கடுமையான விமர்சனங்கள் அதிகமாயின. இதனால் கருணாநிதிக்கு தனிப்பட்ட முறையில், விமர்சனங்களைப் பதிவிட்ட பலர், மாலையில் தடை செய்யப்பட்டனர். பின்னர் மாலை 6 மணியில் இருந்து புதிதாகத் தொடங்கப்பட்ட கருணாநிதியின் 'பேஸ் புக்" காணாமல் போயுள்ளது.

No comments:
Post a Comment