Translate

Friday, 24 August 2012

உரக்கச்சொல் நீ தமிழன் என்று – ஹிப் ஹாப் தமிழா


ஹிப்.. ஹாப் … இது ஒரு மேற்க்கத்திய இசை சார்ந்தது. இன்று தமிழ் சினிமாவின் இசையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்து விட்டது. பொல்லாதவன் படத்தில் Yogi-B ஒரு பாடலை பாடி அது பெரிய வெற்றியும்  பெற்றது. அதே போல் மாசிலாமணி படத்தில் Emcee Jesz பாடியுள்ளார் , அந்த பாடலும் மக்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது. இதே போல் Blaazeம் பல திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர்கள் திரைப்படங்களில் பாடுவதோடு நிறுத்திவிடாமல் தனியாக ஆல்பம் செய்தும் வெளியிடுகின்றார்கள், அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

இந்த ஹிப்-ஹாப் புகழ் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதன்னால் தமிழ் படத்திற்கு இசை அமைபவர்கள் ஹிப்-ஹாப் இசையை தவிர்க்க முடியவில்லை. இந்த வரிசையில் ஹிப்-ஹாப் பாடலை வைத்து ஒரு ஆல்பம் தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்கள் ஒரு இளைஞர் குழு,அதுதான் ஹிப் ஹாப் தமிழா, இதில் நல்ல விஷயம் என்னவென்றால் , தமிழின் பெருமைகளை வைத்துதான் இந்த பாடல் இயற்ற்றப்படுள்ளது. கேட்க கேட்க நன்றாக இருக்கிறது.
இளையராஜா இசையின் ஆதிகம் இருந்தது , அதன் பின்னர் எ.ஆர். ரஹ்மான் இசையின் ஆதிக்கம் இருந்தது, அதன் பின்னர் ஹாரிஸ், யுவன், ஜீ.வி.பிரகாஷ் , தமன் என்று பல்வேறு இசைஅமைப்பளர்கள்களின் ஆதிக்கம், இது போன்று காலத்திற்கு ஏற்ப மக்களின் ரசனையும் மாறிக்கொண்டு வருவது தான் நிதர்சனமான உண்மை. ஹிப் ஹாப் தமிழா,
அதில் இருந்து ஒரு சாம்பிள்
இவர்கள் ரேடியோ மிர்ச்சியில் பாடிய ஒரு பாடல்

Blaaze பாடிய பாடல் , கொலைவெறி பாடலை ரீ-மிக்ஸ்

No comments:

Post a Comment