Translate

Saturday, 4 August 2012

முஸ்லீம்களுக்கு ஆபத்து - ஹக்கீம் ஆதங்கம்


முஸ்லீம்களுக்கு ஆபத்து - ஹக்கீம் ஆதங்கம்
 குக்கிராமங்களில் கூட ஒரு வீட்டுக்குள் அருகிலுள்ளவர்கள் ஒன்றுகூடி கூட்டாக தொழுகை நடத்தக் கூட அஞ்சுகின்ற காலமிது. மதவெறியர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றார்கள். இத்தகைய கேவலமான இழிசெயலை நாட்டில் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஆட்சித் தலைவரும், பாதுகாப்புச் செயலாளரும் வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதால் மக்களின் மனவேதனை மேலும் அதிகரிக்கின்றது. இவ்வாறு கூறியுள்ளார் மஹிந்த அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் ஹகீம். 

மதவழிபாட்டுச் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் கேவலமான செயல்களைச் சுட்டிக்காட்டப்போனால் தாங்கள் நையாண்டி செய்யப்படுகின்றோம்..
 
கல்குடாத் தொகுதி ஓட்டமாவடிப் பிரதேச மாவடிச்சேனையில் கட்சியின் கிளையொன்றை வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment