சிறிலங்கா அரசாங்கம் வெற்றிக்களிப்பைக் கொண்டாடுவதையே முனைப்பாகக் கொண்டிருப்பதாக கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான லைபீரியாவின் லெமா குபோவீ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இராணுவ வெற்றிகளைக் கொண்டாடுவதை நிறுத்தி விட்டு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் எனவும் அவர் சிறிலங்கா அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சிறிலங்கா நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே குபோவீ மேற்படி தெரிவித்திருக்கிறார்.
சிறிலங்கா அரசாங்கம் இராணுவ வெற்றியைக் கொண்டாடி வருகிறது. இது அதற்குரிய நேரமல்ல. கொண்டாட்டங்களை நிறுத்தி எல்லா வேறுபாடுகளையும், களையும் வகையிலான நல்லிணக்கச் செயற்பாடுகளை இப்போதே தொடங்க வேண்டும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைபீரிய அமைதி மற்றும் மனிதஉரிமைச் செயற்பாட்டாளரான லேமா குபோவீக்கு கடந்த 2011ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment