Translate

Thursday 9 August 2012

தமிழ் புலம்பெயர் மக்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிராக செயற்படுகின்றனர் – ஜீ.எல்.பீரிஸ்

தமிழ் புலம்பெயர் மக்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிராகசெயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் புலம்பெயர்தமிழர்கள் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எதிராக செயற்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளினால் நாட்டுக்குள் வாழ்ந்த தமிழ் மக்களும் அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய விவகார மாநாடொன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் நிலவி வரும் கலாச்சார இடைவெளியே முரண்பாடுகளுக்கு ஏதுவாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த நிறைவின் பின்னர் அரசாங்கம் 8 வீத பொருளாதார அபிவிருத்தியைஎட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புபணிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்


http://www.globaltam...IN/article.aspx 

No comments:

Post a Comment