அமெரிக்காவின் முன்நாள் சட்டமா அதிபர் ரம்சே கிளார்க் அவர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்தார் என்று, சிங்கள நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசானது நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தாம் மேற்சபை உறுப்பினர்கள் என்ற குழு ஒன்றை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இக் குழுவில் ரம்சே கிளார்க்கும் இணைந்திருப்பதாக அது தனது அறிக்கையில் சுட்டுக்காட்டி இருந்தது. இதனை அடுத்தே சிங்கள அரசியல்வாதிகள் மட்டத்தில் இதற்கு கடும் எதிர்பு கிளம்பியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. ரம்சே கிளார்க் அவர்கள் அமெரிக்காவில் பெயர்பெற்ற சட்டமா அதிபராகக் கடமையாற்றிவராவார்.
அவருக்கு அமெரிக்க அரசில் இன்னமும் செல்வாக்குகள் இருக்கிறது என்பதனை எவரும் மறுக்க முடியாது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள அரசியல்வாதிகள் நாடு கடந்த தமிழீழ அரசில் இணைந்துள்ள ரம்சே கிளார்க்கை புலிகள் இயக்கத்தில் இணைந்தார் என்று வசைபாடியுள்ளனர். இது நாடு கடந்த அரசாங்கத்துக்கு கிடைத்த ஒரு அரசியல் வெற்றியாகவே கருதவேண்டும்.

No comments:
Post a Comment