Translate

Saturday 18 August 2012

இலங்கையைப் பிரிக்க நான் ஒத்துக்கமாட்டேன்: கனேடிய தூதர் புதுவிதக் கருத்து !

சிங்கள செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், இலங்கைக்கான கனேடியத் தூதர் புரூஸ் லீவி புதுவகையான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வெளியே ஈழத் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடு கனடா எனத் தெரிவித்த அவர், அங்கே பயங்கரவாதிகளுக்கு நிதி சேகரிப்பது அனுமதிகப்படமாட்டாது என்று தெரிவித்தார். 


அது வழமையான ஒரு கருத்து. மற்றும் கனடா அதனை ஏற்கனவே தெரிவித்துள்ளது. இருப்பினும் இலங்கை இரண்டாகப் பிரிவதையு தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இவர் இவ்வாறு ஒரு கருத்தைத் தெரிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் இறையாண்மை குறித்தும், அது இரண்டாகப் பிரிவதை தான் அனுமதிக்கப்போவது இல்லை என்றும் இவர் சிங்களவர்களை திருப்த்திப்படுத்த கருத்துத் தெரிவித்துள்ளார் எனவும் மேலும் சொல்லப்படுகிறது. இவர் தெரிவித்திருக்கும் கருத்துக் குறித்து கனேடியத் தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவது நல்லது.

No comments:

Post a Comment