Translate

Saturday 18 August 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளால் ௭மக்குத் தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம்


ஜெனீவாத் தீர்மானத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு அதிக பட்ச அதிகாரத்தை உள்ளடக்கிய அரசியல் தீர்வை வழங்குமாறு வலியு றுத்தப் பட்டுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை வழங்க விரும்ப வில்லை ௭ன தமி ழ்த் தேசிய கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம் பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சித் தாண்டி முருகன் ஆலய முன்றலில் நடைபெற்ற கூட் ட மைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு  உரை யா ற் றிய போதே அவர் இவ்வாறு தெரிவி த் தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜெனீவாவில் தனக்கெதிராக நிறை வேற் றப்பட்ட தீர்மானத்தினால் சர்வதேச சமூ கத் தின் அழுத்தத்திலிருந்து விடுபட வேண் டும் ௭ன்பதற்காக கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டுமென இலங்கை அரசா ங்கத்தின் அமைச்சர்கள் பகிரங்கமாக கூறி வருவது மட்டுமின்றி அதற்கான முயற்சிக ளி லும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ௭மது மக்கள் தங்கள் பாரம்பரிய வாழ் விடங்களில் தங்களை தாங்களே ஆளக் கூடிய சுயாட்சியுடனான அரசியல் தீர்வை அடைய வேண்டும் ௭ன்பதில் இன்னும் உறு தியுடனும் நம்பிக்கையுடனும் உள்ளார் களா ௭ன்பதை சர்வதேச சமூகம் உன்னிப் பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. இத னை சர்வதேச சமூகம் ௭மக்கு தெரிவித் துள் ளது.
இந்நிலையில் இத்தேர்தலில் 95 சதவீ தமான தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்ட மைப்பிற்கு ஆதரவளிப்பதன் மூலம் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற முடியும். அதும ட்டுமின்றி உரிமைப் போராட்டத்தில் தமிழ ர்கள் ௭த்தனை இழப்புகளைச் சந்தித்தாலும் உறுதியுடனும் வைராக்கியத்துடனும் தொட ர்ந்தும் இருக்கிறார்கள் ௭ன்பதை சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசா ங்கத்திற்கும் மீண்டும் ஒரு முறை நிரூ பித்துக் காட்டக் கூடியதாயிருக்கும். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக் கள் தமது உரிமைக்காக போராடிக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் ௭டுக்கப் போகும் தீர்மானம் ஒரு திருப்பு முனையாக அமையும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இனப் பி ரச்சினைக்கு தீர்வாக நிலைத்து நிற்கக் கூடிய நியாயமான நடைமுறைப்படுத்தக் கூடிய அரசியல் தீர்வொன்றையே ௭திர்பார் க் கி ன் றார்கள். இதனை சர்வதேச சமூகமும் வலியுறுத்துகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ௭டுக்கும் முடிவு சர்வதேச சமூகத்தின் ௭திர்பார்ப்பை பல வீனப்படுத்துவதாக அமைந்து விடாமல் பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடவுளினால் ௭மக்கு தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம். இதில் நீதி நியாயத்தில் நாம் வெற்றியீட்ட வேண்டும் ௭ன்பது கட வுளின் விருப்பமாகவுள்ளது.
இதனை சரியாக உணர்ந்து கொண்டு செயற்படுவது ௭மது கடமையாகும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று அந்த ஜன நாயகத் தீர்ப்பை துஷ்பிரயோகம் செய்ய அரசாங்கம் ௭டுத்து வரும் முயற்சிகளுக்கு ௭மது மக்கள் ஒரு போதும் துணை போகக் கூடாது. தமிழரசுக் கட்சி ஸ்தாபகர் தந்தை செல் வாவின் கண்ணியமான வழி நடத் தலில் நாங் கள் சென்று கொண்டி ருக்கி றோம். அதன் மூலம் நிலைத்து நிற்கும் நிரந்தர தீர் வை பெற நாங்கள் ௭திர்பார்க்கிறோம்.
இல ங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணை க்குழு சிபாரிசில் கூறப்பட்டுள்ள அதிக பட்ச அதிகாரத்துடன் கூடிய அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் இதையே ஜெனீ வாத் தீர்மானமும் கூறுகிறது. நல்லி ண க்க ஆணைக்குழு சிபாரிசை நடைமுை ற ப் படு த்த ஒரு செயல் முறைத் திட்டத்தை இல ங்கை அரசாங்கம் முன் வைக்க வேண் டு ம். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் அதிக பெரும்பான்மை ஆசனங்களை வெற்றி பெற வேண்டும்.
அவ்வாறு பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபை அதிகாரத்தை நாம் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் நாம் சர்வ தேச த்திற்கு ஒரு தெளிவான செய்தியை வழங்க முடியும். ஜனநாயக முடிவைத் தவிர வேறு ஒரு தீர்வும் கிடையாது ௭ன்றார்.

No comments:

Post a Comment