Translate

Tuesday, 21 August 2012

தமிழ் மக்களின் உரிமைகளை தட்டிக் கேட்பது இனவாதமா; மனோ கணேசன் கேள்வி

தமிழ் மக்களின் உரிமைகளை தட்டிக் கேட்பது இனவாதமா; மனோ கணேசன் கேள்வி
news
தமிழ் மக்களின் உரிமைகளை நியாயமான முறையில் தட்டிக் கேட்டால் அது இனவாதமா என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


நாங்கள் என்ன, இந்நாட்டின் ஜனாதிபதி பதவியையா, பிரதமர் பதவியையா கேட்கிறோம்? அல்லது சப்ரகமுவ மாகாணத்தின் முதலமைச்சர் பதவியா கேட்கிறோம்? சட்டத்தில் இந்த பதவிகள் கோர எமக்கு தடை இல்லை. ஆனால் நடைமுறையில் இது நடக்க முடியாது.

எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு போகும்போது, பாராளுமன்றத்தில் ஜோன் அமரதுங்க எம்பீயை பதில் எதிர்க்கட்சி தலைவராக நியமித்தார். அதற்கு ஐ.தே.கவிலேயே எதிர்ப்பு கிளம்பியது.

ஏனென்றால் ஜோன் அமரதுங்க ஒரு சிங்களவராக இருந்தாலும்,அவர் ஒரு கிறிஸ்தவராம். ஒரு சிங்கள பெளத்தருக்கு மாத்திரமே இந்த உரிமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது என்ன நியாயம்? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். நாங்கள் எமது மக்களுக்கான உரிமைகளை தட்டி கேட்டால் அது இனவாதமாம். அதுவும் இவர்களுக்கு பிடிக்காதாம். இவர்களுக்கு பிடித்ததைமாத்திரம் செய்வதற்கும், பிடிக்காததை செய்யாமல் இருப்பதற்கும், மனோ கணேசன் பெரும்பான்மை கட்சிகளின் எடுபிடி அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீங்களும், நானும் தமிழர்கள். எனது இனம் வாழ வேண்டும். எனது இனத்துக்கு துன்பம் கொழும்பில், மலையகத்தில், வடக்கில், கிழக்கில் எங்கு ஏற்பட்டாலும்,நான் அங்கு நிற்பேன்.

அதுபோல் எனது இனத்துக்கு நம்மை பயக்கும் என நான் நம்பும் எதையும் எந்தவித தயக்கமும் இல்லாமல் தாம் செய்வேன் என உறுதியளித்துள்ளார்.

அதனால் தான் நாம் தைரியமாக, துணிச்சலுடன் பல முடிவுகளை எடுத்துள்ளேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் இனத்துக்கு பணியாற்றுவதற்கு, நமது கட்சி எவரிடம் அனுமதி கோரி நிற்காது. ரணில் மனம் வருந்துவார், ராஜபக்ச கோபிப்பார் என்று நான் தயங்கி நிற்பது கிடையாது. ஏனென்றால் எமது இனம் துன்புறும்போது அது எனக்கும்,உங்களுக்கும்தான் வலிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment