தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்;10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும் |
வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதுடன் நள்ளிரவுக்கு முன்னர் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளதாகவும் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் 10 மணியளவில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் நள்ளிரவுக்கு முன்னர் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. எனினும் நீண்ட வாக்குச் சீட்டுக்கள் இருப்பின் 2மணிக்கு முன்னர் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இம்முறை குறைந்தளவிலான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மூன்று மாகாணத்திலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் 60 வீதமான வாக்கெடுப்புக்கள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் சிறுசிறு வன்முறைச் சம்பவங்களுடன் சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதன்படி கிழக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம் ஆகியனவற்றில் இன்றைய தினம் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. காலை 7மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்புக்கள் மாலை 4மணிக்கு சுமூகமான முறையில் முடிவடைந்துள்ளது. குறித்த தேர்தலில் 108 உறுப்பினர்கள் தெரிவாகுவதற்காக 3ஆயிரத்து 73 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் 11 ஆசனங்களும், அம்பாறையில் 14 ஆசனங்களும், திருகோணமலையில் 10 ஆசனங்கள் என 35 ஆசனங்களுக்கான போட்டியும் வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரத்தில் 21 ஆசனங்களும், பொலநறுவையில் 10 ஆசனங்களுமாக 31 ஆசனங்களுக்கான போட்டியும் சப்பிரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரியில் 24 ஆசனங்களும் , கேகாலையில் 18 ஆசனங்களுமாக 42 ஆசனங்களுக்கான போட்டியும் நடைபெற்றுள்ளது. இம்முறை நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். எனினும் குறித்த வாக்குப் பதிவுகள் கணக்கெடுப்பிற்காக 236 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. |
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 8 September 2012
தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்;10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment