கிழக்குத் தேர்தலில் அரசாங்கம் திட்டமிட்டு சதி - 50 கோடி ரூபாய் பிள்ளையானுக்கும், 50 கோடி ரூபாய் கருணாவுக்கும் தேர்தலுக்கு செலவிட அரசாங்கம்
அதற்கு மேலாக கிட்டத்தட்ட 2000 பேர் வரை தென்பகுதியில் இருந்து சிங்களவர்களை அழைத்து அனைத்து வாக்கு சாவடிக்கும் எஸ்பிஓ உட்பட உயர் பதவிகளில் அமர்த்தியுள்ளது.
சில இடங்களில் தென்னகத்தில் இருந்து வருகை தந்த எஸ்பிஓமார்கள் வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு மக்களை வற்புறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியது. பொதுவாக மட்டக்களப்பு இருதயபுரம் வாக்குச் சாவடி, மண்டூர் 14ம் கொலணி வாக்குச் சாவடி, வாகரை வம்மிவட்டவான் வாக்குச்சாவடி போன்ற பலவற்றில் எஸ்பிஓ வெற்றிலைக்கு வாக்களிக்க தூண்டியதுடன் வாக்கு சீட்டுகளில் வாக்கை இட்டு வழங்கிய செய்திகள் மக்களை வேதனைப்படுத்தியுள்ளது.
இவ்வேளை இவ்வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள உதவி தேர்தல் ஆணையாளர் நியமிக்கப்பட்டிருந்தால் இவர் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியை மாற்றி வின்சன் மகளீர் கல்லூரி, மத்திய கல்லூரி போன்றவற்றை வாக்கெண்ணும் நிலையமாக்கி உள்ளனர்.
இதன் அருகே கருணா அம்மானின் தேனகமும், மட்டக்களப்பு மாட்ட சுதந்திரக கட்சி அமைப்பாளர் தம்பிமுத்துவின் புதல்வரினதும் வீடு உண்டு. அத்தோடு கடந்த 6ஆம் திகதி இரவு கடல் மார்கமாக வாக்கு பெட்டிகள் கதிரவெளி, பால்சேனை, வாகரை, பனிச்சங்கேணி, காயான்கேணி, கல்குடா உட்பட பல இடங்களுக்கு கொண்டுவரப்பட்டதாக பொதுமக்களிடமிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. வாக்குப் பெட்டிகள் மாற்றப்படலாம் என்ற அச்சமும் தோன்றியுள்ளது.
இவ்வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்களும், பிள்ளையான் குழுவினரும் பொதுமக்களை அச்சுறுத்தியதும், பணம், பொருட்கள் வழங்கியமை. மீள்குடியேற்ற பொருட்கள், பொருளாதார அமைச்சின் கீழான மீள் எழுச்சித் திட்ட உதவிப் பொருட்கள் வாகரை மற்றும் படுவான்கரை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டதுடன் மக்களுக்கு வாக்குகளுக்காக பெருந்தொகை பணங்களும் வழங்கப்பட்டன.
அத்தோடு பல இடங்களில் பிள்ளையானின் ஆதரவாளர்கள் வாக்குகளை பணம் கொடுத்து பெற்றுள்ளனர். மிகவும் மோசமான முறையில்சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் செயற்பட்டுள்ளனர்.
இத்தேர்தலில் கல்குடா வாக்களிப்பு நிலையத்தின் வாக்குப் பெட்டி வாக்களிப்பு நிலையம் மூடப்பட்டு சில மணிநேரங்களின் பின்பே சென்றுள்ளது. இதுவும் மக்களுக்கு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்தா அளுத்கமே மற்றும் பல அமைச்சர்கள் மட்டக்களப்பில் இருந்து கொண்டு பல அடாவடித்தனங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
300 விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உடைகள் மற்றும் உபகரணங்கள் உட்பட பல உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. 50 கோடி ரூபாய் பிள்ளையானுக்கும், 50 கோடி ரூபாய் கருணா அம்மானுக்கும் தேர்தலுக்கு செலவிட அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்நிதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாத்திரமே பயன்படுத்த வழங்கப்பட்டது.
இவ்வேளை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு மிகவும் குறைவான வாக்குகளே மக்களால் வழங்கப்பட்ட நிலையில் தானே முதலமைச்சர் என கூறுவதிலும் கருணாவின் அக்கா ருத்திரமலர் தானே முதலமைச்சர் என கூறுவதிலும் ஏதோ சதி நடைபெறுகின்றது என்ற சந்தேகம் எல்லோரிடமும் தோன்றியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் சதியின் முடிவை.
No comments:
Post a Comment