Translate

Saturday, 8 September 2012

மட்டு. ஆரையம்பதியில் த.தே.கூட்டமைப்பு வேட்பாளரை கடத்திச் செல்ல எடுத்த முயற்சி தோல்வி


மட்டு. ஆரையம்பதியில் த.தே.கூட்டமைப்பு வேட்பாளரை கடத்திச் செல்ல எடுத்த முயற்சி தோல்வி

மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் தேர்தல் வாக்களிப்பு நிறைவுபெற்ற பின்னர் வாக்குப்பெட்டியை சீல் இடும் பணியை பார்க்கச்சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் மகேந்திரலிங்கத்தை தாக்கி கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதுடன் அவரது வாகனமும் தாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 4.30மணியளவில் பெட்டி சீலிடப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தபோது அங்குவந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் பிரசாந்தன், அவரது சகோதரன் கரன், உதவியாளர் நித்தி மற்றும் ஒப்பந்தகாரர் சந்திரகுமார் உட்பட சிலர் இந்த இச்செயற்பாட்டில் ஈடுபட்டதாக வேட்பாளர் மகேந்திரலிங்கம் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்

இவர் வாக்குப்பெட்டியை சீல் வைப்பதை பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென வந்த அவர்கள் தாக்குதல் நடத்தி தன்னை கடத்த முற்பட்டுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில்,தனது ஆதரவாளர்கள் இது தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து தடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தனது வாகத்தின் மீது தாக்குதல் நடத்தியதுடன் தன்னைக் கொலை செய்யப்போவதாக மிரட்டியதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment