கொழும்பு: தமிழ்நாட்டில் சிங்களவர் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது இலங்கையில் தாக்குதல் நடத்தினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக கொழும்பில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கைக்கு எதிராக தமிழ்நாடு செயற்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கைக்கு வழக்கமாக வருகின்ற ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டவர் மீது இங்குள்ளவர்கள் தாக்குதல் மேற்கொண்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் உணரவேண்டும். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முட்டாள்தனமாக செற்படுவதால் இலங்கை - இந்திய உறவில் மிகப் பெரிய விரிசல் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இது தொடர்பாக இந்திய மத்திய அரசு கவனத்துடன் செயற்பட வேண்டும்.
'இலங்கை - இந்திய உறவில் இவ்விவகாரங்கள் மிகப் பெரும் விரிசலை ஏற்படுத்தி விவகாரம் கையை மீறிச் செல்வதற்கு முன்பாக இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:
Post a Comment