Translate

Monday 10 September 2012

முஸ்லிம் காங்கிரஸ் யாருடன் சேர்வது குறித்து கட்சி உயர்பீடம் இன்று கூடுகிறது

news
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்த முக்கிய தீர்மானிக்கும் பொருட்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் இன்று கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பாண்மை எவருக்கும் கிடைக்காத நிலையில் ஏழு ஆசனங்களைப் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரசின் உதவியை நாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் முனைப்பு காட்டி வருகின்றன.

எவ்வாறாயினும் கிழக்கில் சிறுபாண்மையினரின் ஆட்சியை நிறுவ வேண்டும் என முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியமைக்கத் தயார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ள அதேவேளை, இன்று ஜனாதிபதி மஹிந்த தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் அமைச்ரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைப்பதா, அல்லது அரசாங்கத்துடனேயே தொடர்ந்து செயற்படுவதா என்பது குறித்து இன்றைய தினம் நடைபெறவுள்ள எமது அரசியல் உயர்பீட கூட்டத்தின் போதுதான் இது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

சிறலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைத்த அனைத்து வாக்குகளும் அரசாங்கத்துக்கு எதிராகவே பிரயோகிக்கப்பட்ட வாக்குகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்

No comments:

Post a Comment