Translate

Wednesday, 5 September 2012

கொல்லாமை போதிப்பது பௌத்தம்; கொலைகளைத் தூண்டுபவர் மஹிந்த – இந்திய கம்யூனிஸ்ட்


புத்தரின் அடிப்படை கோட்பாடு கொல்லாமை. வென்றவர்களையும், வெல்லப்பட்டவர்கள் நட்போடு நடத்த வேண்டும் என்பதும் புத்தரின் கோட்பாடுகளில் ஒன்றாகும். இந்த கோட்பாட்டிற்கு நேர்மாறாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடந்து கொள்கிறார். இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு.

 
தஞ்சையில் செய்தியாளர்களிடம் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். 
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் ஒரு பகுதியில்தான் தமிழகம் உள்ளது. தமிழ்நாட்டில் பிறந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள் தான். இவர்களையும் மத்தியஅரசே பாதுகாக்க வேண்டும். 
 
இலங்கை எமது நட்பு நாடு என்று மத்திய அமைச்சர் சொல்கிறார். அவர் எதை வைத்து நட்பு நாடு என்கிறார் என்பது தெரியவில்லை. இதுவரைக்கும் தமிழக மீனவர்கள் 800 பேர் இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை கடலில் அள்ளி வீசுகின்றனர். வலைகளை அறுக்கின்றனர். மீனவர்களை தொடர்ந்து தாக்குகின்றனர்.
 
கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வு எடுக்கவும், வலைகளை காயவைக்கவும் ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது. 
 
இவ்வாறான நிலையில் இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவுவதற்கான அடிப்படைகள் எதுவுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment