இன்றைய அரசானது யுத்தத்தை வைத்து விற்றுப் பிழைக்கிறதே தவிர வேறு எதனையும் மக்களுக்குச் செய்யவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
யுத்தம் ஒன்று வெற்றி கொள்ளப்பட்டது மட்டுமே இந்த அரசின் ஒரே சாதனை. இதனை விடுத்து மக்களுக்கு எதனையுமே செய்யவில்லை. இதனை மக்களிடம் விற்றுப் பிழைப்பது மட்டுமே இன்றைய அரசுக்கு உள்ள ஒரே வழி.
கிராமங்களுக்குச் சென்று துறைமுகங்கள் அமைப்பதால் அங்கு கப்பல்கள் வரப்போவதில்லை. கிராமங்களில் விசாலமான விமான நிலையங்களை அமைப்பதனால் அந்த விமான நிலையத்தில் ஒரு மணித்தியாலத்துக்கு ஒரு விமானம் என வந்து இறங்கப் போவதில்லை.. விளையாட்டு மைதானங்களை அமைக்கிறார்கள். ஆனால் அந்த விளையாட்டு மைதானங்களில் விளையாட்டுக்கள் இடம்பெறுவதோ மூன்று, நான்கு வருடங்களுக்கு ஒரு தடவைதான்.
இன்று நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், கொலை, கொள்ளைகள் தாராளமயப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment