Translate

Monday 3 September 2012

திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை – தமிழ் தேசிய கூட்டமைப்பினரைத் தவிர வேறு எவராலும் தட்டிக் கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முடியது


வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் தாயக பூமியில் அரசாங்கம் திட்டமிட்டமுறையில் சிங்கள மக்களைகுடியேற்றிவருகிறது இதை தமிழ் தேசிய கூட்டமைப்பினரைத் தவிர வேறு எவராலும் தட்டிக் கேட்கவோ தடுத்து நிறுத்தவோமுடியது என வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்லம் அடைக்கலநாதன்தெரிவித்துள்ளார்.செங்கலடியில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டுஉரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளர்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்லம் அடைக்கலநாதன் தொடர்ந்து உரையாற்றுகையில் :

இந்த நாட்டிலே அனைத்து உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழக்கூடிய எங்களுடைய இனத்திற்கு இனப் பிரச்சினைஇருக்கிறது உரிமைப் பிரச்சினை இருக்கிறது அதை உடைத்தெறிந்து அதனூடாக ஏற்படுகின்ற இடர்களையெல்லாம் தாண்டிஎங்களுடைய மக்களுக்கு ஒரு சமஷ்டி ரீதியான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து விடயங்களையும் செய்யக்கூடிய வகையிலே ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையாக அமைகிறது.இந்த கிழக்குமாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரை எமது மக்களின் வாக்குகளை சிதரடிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே 24சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.

 இதிலே யாராவது ஒரு சுயேட்சைக் குழு அரசாங்கத்திற்கெதிராக குரல்கொடுத்திருக்கிறார்களாஇவர்கள் எதிரியாக நினைப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பினரை மட்டுமேஇவர்களுக்கு அரசாங்கம்பணம் கொடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைக்கின்ற வாக்குகளை சிதைப்பதற்காக களமிறக்கியிருக்கிறதுஇதிலேதமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி அக்காவும் ஒருவர்.தங்கேஸ்வரி அக்கா இந்ததேர்தலில் தனது சொந்த பணம் ஏதாவது செலவளித்திருக்கிறாராஇவரின் அறிக்கைகளைப் பார்க்கும் போது முழுக்கமுழுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தாக்குகிறார்அவர் கூறுகிறார் நாங்கள் வெற்றிபெற்றால் ஆளும் கட்சியுடன் சேர்ந்துஇணக்கப்பாட்டு அரசியலுக்கு வருவோம் என்கிறார்வடக்கிலே டக்லஸ் தேவானந்தாவும் இதைத்தான்கூறிக்கொண்டிருக்கிறார் கிழக்கில் தங்கேஸ்வரி அக்கா கூறுகிறார்

இந்த சுயேட்சைக் குழுக்கழுக்கு நான் ஒன்;றை மட்டும்கூறிக்கொள்ள விரும்புகிறேன் அரசாங்கம் தரும் பணத்தை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் எங்கள் உறவினர்களுக்குகொடுங்கள் அவர்கள் அனுபவிக்கட்டும்தயவுசெய்து எங்களுடைய மக்களின் உரிமையை சிதறடிக்கின்ற வகையில் நீங்கள்செயற்பட வேண்டாம்.ஆளும் கட்சியிலே முன்னாள் முதலமைச்சர் மற்றும் பல தமிழர்கள் போட்டியிடுகிறார்கள் இவர்கள்தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றுமே செய்யாது அரசாங்கத்திற்கு வாக்களியுங்கள் பல அபிவிருத்திகளை நாம்பெற்றுகொள்ள முடியும் என்று கூறுகிறார்கள்தேர்தல் என்று வந்துவிட்டால் போட்டி இருக்க வேண்டும் வன்முறை இருக்ககூடாது நீங்கள் என்ன செய்கிறீர்கள் தமிழர்களாக இருந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற உங்களுடையஇனத்தை தாக்குகிறீர்கள்

மஹிந்த ராஜபக்ஷவும் அவர்களுடைய அரசாங்கமும் மகிழ்ந்து கொள்ள வேண்டும் உங்களைபெரிதாக நினைக்க வேண்டும் என்பதற்காக தாக்குகிறீர்கள்எங்களுடைய இனத்தைப் பற்றி சிந்திக்கின்றீர்களாஉங்களால்முடிந்தால் போட்டிக்கு வாருங்கள்.தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிப்பதற்காக அரிசி கொடுக்கிறீர்கள் பணம்கொடுக்கிறீர்கள் அமைச்சர் பட்டாளம் வரும் ஜனாதிபதி வருவார் தமிழிலே பேசுவார் இவ்வாறு செய்தாவது வாக்கைபெற்றுவிடலாம் என்று நினைக்கின்றீர்கள் எங்களுடைய இனம் பிச்சையெடுக்கின்ற இனமாகவா இருக்கின்றதுஇந்தஅரசியலிலே புரட்டி புரட்டி அடித்து அகதிகளாக இருக்கிற நிலைக்கு இன்றும் கொண்டு செல்லும் இந்த அரசாங்கத்தோடுஇணைந்து எங்களுடைய வறுமையை எங்களுடைய வாழ்க்கையை தொலைதூரம் கொண்டு பிச்சை கொடுப்பதால்வாக்களிப்பார்கள் என்று இனத்தை பிச்சைக்காரர்களாக கருதுவது உன்னுடைய இனத்தை நீங்களே கேவலப்படுத்துவதாகஅமையாதா

யாருக்கும் அடிபணியாதது எங்களுடைய இனம் உரிமைக்காக தங்களுடைய உயிரைக் கொடுத்திருக்கிறதுஉரிமைக்காக இன்றைக்கும் ஓடிக்கொண்டிருக்கிறதுஎங்களாலும் அரசாங்கத்தோடு இணைந்து விடுதலைப் போராட்டத்தைப்பார்த்துக் கொண்டிருக்க முடியும் எங்களை எவராலும் விலை கொடுத்து வாங்க முடியாது இன்றைக்கு வடக்கு கிழக்கிலேஇருக்கின்ற எமது இனத்தை பிரித்துப் பார்க்கும் தன்மையோடுதான் இந்த அரசு செயற்படுகிறது இதற்கு வக்காளத்து வாங்கிக்கொண்டு எங்களுடைய இனத்தை பிச்சையெடுக்கும் நிலைக்கு கொண்டுவர உங்களுக்கு வெட்கமாய் இல்லையா?

உங்களுடைய இனத்தின் விடுதலைக்காக நீங்களும் போராடியவர்கள் உங்களது மனசாட்சி உறுத்த வேண்டும்நீங்கள்உங்களுடைய இனத்தைக் காட்டிக் கொடுத்து வெற்றிலைக் கட்சியில் முஸ்லிம் உறுப்பினர்களை தெரிவு செய்யப்போகிறீர்கள்தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்கிறது என்று கேட்கிறீகள் இந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டும் இந்தமண்ணை யாரும் அபகரிக்கக் கூடாது அபகரிக்கவும் முடியாது என்ற நோக்கிலே தந்தை செல்வா தொடக்கம் தேசிய தலைவர்பிரபாகரன் விடுதலை இயக்கங்கள் உட்பட பல தியாகங்களை செய்த அடிப்படையிலே இன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புசெயற்பட்டுக்கொண்டிருக்கிறது அந்த பணியிலே உன்னுடைய மண்ணும் காப்பாற்றப்படுகிறது.எமது நிலம் எமக்கு வேண்டும்அதற்காகத்தான் இவ்வளவு தியாகங்கள் எங்களுடைய நிலத்தை சூரையாடுகின்ற வகையிலும் நாங்கள் பாரம்பரியமாகவாழ்ந்த அந்த வரலாற்றை விதைக்கின்ற வகையிலும் இந்த அரச திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.மீள்குடியேற்றம் என்ற பேரிலே சிங்கள மக்களை குடியேற்றுகின்றார்கள் நாங்கள் அதையெல்லாம் தட்டிக் கேட்கின்றோம்எங்களுடைய நிலத்திலே அடாவடித் தனம் செய்கின்றார்கள் என்று உலக நாடுகளிடம் சொல்கின்றோம்.

 இதை உங்களால்தட்டிக்கேட்க முடியுமாநாங்கள் அதற்காக போராடிக்கொண்டிருக்கின்றோம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் உங்களுடையநிலமும் பாதுகாக்கப்படுகிறது.எமது மக்கள் முகாம்களிலே அகதிகளாக வாழ்கின்ற நிலையிலே வரவு செலவுத் திட்டத்திலேஅபிவிருத்திக்கென நிதி ஒதுக்காமல் எங்களுடைய மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு பாதுகாப்பிற்கென இராணுவத்தினருக்குபல கோடி ரூபா நிதி ஒதுக்கியுள்ளீர்கள்எமது பிரதேசத்தில் அதிகளவான இராணுவத்தினரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்எங்களுடைய மக்களை அடக்க நினைக்கும் இராணுவத்தினரை வெளியேற வேண்டும் என்று தேசிய கூட்டமைப்பு கூறுகிறது.இதனால் உன்னுடைய சகோதரி உன்னுடைய உறவினர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.

இந்த அரசு எமது வணக்கஸ்தலங்களையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு ஒவ்வொரு மூலைக்கு மூலையும் புத்த சிலை வைக்கிறார்கள்எங்களுடைய மக்கள்வழிபட முடியவில்லை இதை உங்களால் தட்டிக் கேட்க முடியாது தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தட்டிக்கேட்கின்றனர் இதனால் உங்களுடைய நிலத்திலும் புத்தர் சிலை வைக்காத நிலை உருவாகிறதுவடக்கு கிழக்கில்எங்களுடைய மக்களை விரட்டி விரட்டி அடித்து படுகொலை செய்திருக்கிறார்கள் தென் இறுதி வடிவம் முள்ளி வாய்காலிலேமுடிவடைந்திருக்கிறது.

 எங்களுடைய மக்கள் துடிக்க துடிக்க புதைக்கப்பட்டிருக்கிறார்கள் தாய் பால் மாவிற்காகநிற்கின்றபோது விமானம் மூலம் குண்டு போட்டு இன்றைக்கு எத்தனை அனாதை சிறுவர்கள் இருக்கிறார்கள்.வைத்தியசாலைகளிலே இதை உயிருடன் இருந்த எத்தனை பேர் விமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள்இதை யார்செய்தது இவர்களுக்கா வாக்கிளிக்க போகிறீர்கள்.வடக்கு கிழக்கிலே அழிக்கப்பட்ட காணாமல் போன இன்றைக்கும்சிறைகளிலே வாழ்கின்ற மடிந்த எல்லா விதைகளும் இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே கதவைத் தட்டுகிறதுஇந்தஅரசாங்கம் தண்டிக்கப்பட வேண்டும் எங்களுடைய இனத்தை அழித்த அடிமையாகிய இந்த அரசு சர்வதேச ரீதியில்தண்டிக்கப்பட வேண்டும் என்ற எங்களுடைய மக்கள் அனுபவித்த அவலம் இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே கதவைத்தட்டுகிறது.இந்த சூழ்நிலையில் கிழக்கு மாகாண சபை ஒரு வருடத்திற்கு முன் கலைக்கப்பட்டிருக்கிறதுவருகின்ற நவம்பர்மாதம் ஐக்கிய நாடுகள் சபையிலே இலங்கை அரசுக்கெதிராக மனித உரிமை மீறல் சம்மந்தமான பிரேரணைகொண்டுவரப்படவுள்ளது அங்கே கேள்வி கேட்பார்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகத்தான் இந்த தேர்தல்நடைபெறுகிறது

நீங்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்து இந்த அரசை காப்பாற்றுகின்ற போது அரச தரப்பு கருணாவும்பிள்ளையானும் ஐக்கிய நாடுகள் சபையிலே சென்று கூறுவார்கள் கிழக்கு மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள் கிழக்குமாகாணத்திலே எந்த பிரச்சினையும் இல்லை வன்னியிலே விடுதலைப் புலிகள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளார்கள் என்றகூறுவார்கள்.கிழக்கு மக்கள் எங்களை ஆதரித்திருக்கிறார்கள் இங்கு காணமல் போன நிகழ்வு இடம்பெறவில்லை எவரும்கொல்லப்படவில்லை எங்களுடைய பெண்கள் விதவைத் தாய்களாக இருக்கவில்லை. 13 ஆயிரத்திற்கு மேல் சிறைகளிலேஇளைஞர்கள் வாடிக் கொண்டிருக்கவில்லை என்ற ரீதியில் கிழக்கு மாகாண மக்கள

No comments:

Post a Comment