Translate

Friday, 7 September 2012

எதிர்ப்பு காட்டவே சிங்களவர்களை திருப்பி அனுப்பினோம்


இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற பெருமளவிலான வன்முறைகளுக்கு எதிராக சிங்களவர்கள் குரல் கொடுக்கவில்லை என்றும் அதற்கு எதிர்ப்பு காட்டும் விதமாகவே தமிழகம் வந்த இலங்கை யாத்ரிகர்களுக்கு எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோதெரிவித்தார்.

சிங்களவர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்று கூறிய வைகோ, தமிழ் மக்கள் சாகும் போது கவலைப்படாமல் தற்போது சுற்றுலா வருகிறீர்களா என்று சிங்களர்களிடம் உணர்வுள்ள தமிழர்கள் எதிர்ப்பைக் காட்டியதாக அவர் கூறினார். இது நியயமான எதிர்ப்பு என்றும் அவர் கூறினார்.
திருச்சியில் தாக்குதலுக்குள்ளானவர்கள் பலர் தமிழ் கிறிஸ்தவர்கள் என்று சுட்டிக் காட்டியபோது, சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொண்டு தமிழர்கள் ஏன் வர வேண்டும் என்று அவர் கேட்டார்.
சிங்களர்களுக்கு ஆதரவாகவே இந்திய அரசு செயல்படுவதாகும் வைகோ குறிப்பிட்டார். இம்மாத இறுதியில் இந்தியா வரத் திட்டமிட்டுள்ள இலங்கை ஜனாதிபதியை எதிர்த்து சாஞ்சியில் போராட்டம் நடத்தவும் மதிமுக திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment